பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று, பாதுகாப்பு அமைச்சகத்தின் தெற்குப் பகுதியில் நடந்த கூட்டத்தில் லடாக் எல்லை நிலைமை குறித்து மறுஆய்வு செய்தார். இதில் பாதுகாப்புப்படை தலைமைத் தளபதி மற்றும் ராணுவ விவகாரத்துறை செயலாளருமான ஜெனரல் பிபின் ராவத், ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானே, கடற்படைத்தளபதி அட்மிரல் கரம்பீர்சிங் மற்றும் விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதவ்ரியா ஆகியோர் கலந்து கொண்டனர்
மறுஆய்வு கூட்டத்தில், சீனா வன்முறையை நிர்பந்தித்தால் தகுந்த பதிலடி கொடுக்க இந்தியாவின் முப்படைகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டதாக பாதுக்காப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிகின்றன. "இந்தியா விரிவாக்கத்தை விரும்பவில்லை, ஆனால் சீனாவிலிருந்து ஏதேனும் நடவடிக்கை இருந்தால், படைகளுக்கு தகுந்த பதில் அளிக்க சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது," என்று விவாதிக்கப்பட்டது.
இந்தியா- சீனா எல்லைப் பகுதியில் துப்பாக்கிகள் பயன்படுத்துவது தொடர்பாக தற்போது கடைபிடிக்கப்படும் நடைமுறைகள் குறித்தும், தற்போதைய சூழலில் அத்துமீறல்களுக்கு பதில் அளிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்திய முப்படைகள் எந்தவொரு சூழ்நிலையையும் கையாளும் திறன் கொண்டது என்பதில் இந்திய அரசு முழு நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், களத்தில் செயல்படும் இராணுவ அதிகாரிகள் நிலைமைக்கு ஏற்ற சிறந்த முடிவுகளை எடுப்பார்கள் என்றும் ராணுவ தளபதிகளிடம் கூறப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
"முப்படைகள் ஏற்கனவே ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு அறிவிக்கப்பட்டது. இருப்பினும், சீனா துருப்புகள் ஊடுருவியதாக கூறப்படும் கிழக்கு லடாக் பகுதியில் உள்கட்டமைப்பு பணிகளை தொடர வேண்டும் என பாதுக்கப்பு அமைச்சார் தெரிவித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், படைக்குவிப்பு, சண்டை அல்லது தரை, வான் மற்றும் கடல்வழி பதிலடி தாக்குதல் என, நாட்டைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் முப்படைத் தளபதிகளுக்கு தெரிவித்தார்.
இரண்டாம் உலகப்போர் வெற்றியின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக ஜூன் 24, 2020ஆம் தேதி நடைபெறவிருக்கும் வெற்றி அணிவகுப்பில் கலந்துகொள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாஸ்கோவிற்கு புறப்பட்டு செல்லும் ஒரு நாள் முன்னதாக இந்த கூட்டம் நடைபெற்றது.
ரஷ்யா மற்றும் பல நேசக்கரங்கள் செய்த வீரச் செயல்களையும், அவர்களது தியாகங்களையும் கௌரவிக்கும் வகையில் அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரஷ்யக் கூட்டமைப்பின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோயுக், இந்தியப் பாதுகாப்பு அமைச்சரை வெற்றி அணிவகுப்புக்கு அழைத்துள்ளார். இது முதலில் மே 9, 2020 அன்று திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.
ஜூன் 19 அன்று, எல்லை நிலைமை குறித்த அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி," படைக்குவிப்பு, சண்டை அல்லது தரை, வான் மற்றும் கடல்வழி பதிலடி தாக்குதல் என, நாட்டைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை நமது முப்படையினரும் மேற்கொண்டு வருகின்றனர். நம் நாட்டின் ஒரு அங்குல நிலத்திற்குக் கூட யாரும் சொந்தம் கொண்டாட முடியாத அளவிற்கு, நாடு வலிமையுடன் உள்ளது என்று தெரிவித்தார். மேலும், நமது எல்லைகளைப் பாதுகாக்கும் திறன், நமது ராணுவப் டையினருக்கு இருப்பதாகவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு அவர் உறுதியளித்தார்
எல்லைக் கட்டுபாட்டு பகுதி அருகே இந்த முறை சீனப்படைகள் மிகப் பெரிய பலத்துடன் வந்ததையும், இந்திய ராணுவம் பதிலடி பொருத்தமானதாக அமைந்ததையும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், பிரதமர் எடுத்துரைத்ததாக சனிக்கிழமையன்று பிரதம மந்திரி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டது.
சீனாவின் கட்டமைப்பை பிரதிபலிக்கும் வகையில், இந்தியாவும், தனது துருப்புக்களை முன்னோக்கி நகர்த்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.