இந்தியா சீனா இடையிலான 13-வது சுற்று பேச்சுவார்த்தை நேற்று காலை 10.30 மணிக்கு தொடங்கி, இரவு 7 மணிக்கு நிறைவடைந்துள்ளது. லடாக் அசல் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் சீன பகுதிக்குள் அமைந்துள்ள மோல்டோ பகுதியில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்தியா - சீனா இடையே நடந்த இந்த 8.30 மணி நேர பேச்சுவார்த்தை பரபரப்பைப் பேசப்பட்டு வந்தது. ஏனன்றால், கடைசியாக 12ஆம் கட்ட பேச்சுவார்த்தை ஜூலை 31 ஆம் தேதி நடந்தது. இதுகுறித்து ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், "இந்திய ராணுவம் தரப்பில் ஆக்கப்பூர்வமான பரிந்துரைகள் வழங்கப்பட்டது. ஆனால், சீனா தரப்பு அதை ஒப்புக்கொள்ளவில்லை. பேச்சுவார்த்தையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் திட்டத்தையும் அவர்கள் அளிக்கவில்லை. இருப்பினும், இருதரப்பு கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு களத்தில் நிலையான தன்மையைப் பராமரிக்க ஒப்புக்கொண்டனர்.
இரு தரப்பு உறவை சீனா முழுமையாகக் கருத்தில் கொண்டு கொள்ளும் என நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். அதேபோல் இருதரப்பு ஒப்பந்தத்தையும் வழிகாட்டுதலையும் முழுமையாகப் பின்பற்றி மற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் தொடர்ந்து பணியாற்றுவோம்" குறிப்பிட்டிருந்தனர்.மேலும், ஹாட் ஸ்பிரிங்கில் பிபி 15லிருந்து படைகளை விலக்கிக்கொள்ள ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பானது, எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் சீனாவின் ஊடுருவல்கள் அதிகமாகும் நிலையில் நடைபெற்றுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தவாங்கில் இந்திய மற்றும் சீன ரோந்து படைகள் நேருக்கு நேர் வந்தன. அதே போல, ஆகஸ்ட் மாத இறுதியில் உத்தரகாண்டில் பாரஹோதியில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியை சீனப் படைகள் தாண்டி வந்தததாக கூறப்படுகிறது.
டெப்சாஙகில், பிபி 10, பிபி 11, பிபி 11 ஏ, பிபி 12 மற்றும் பிபி 13 ஆகிய பகுதிகளை இந்தியா அணுகுவதை தடுக்க சீனா ரோந்து படைகளை நிறுத்தியுள்ளது. சீனா நாட்டு பொதுமக்கள் சிலர், டெம்சோக்கில் உள்ள சார்டிங் நாலாவில் இந்தியாவுக்கு சொந்தமான பகுதியில் கூடாரங்களை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், கிழக்கு லடாக் பகுதியில் ராணுவத்தை அனுப்ப சீனா உள்கட்டமைப்பை உருவாக்குகிறது என்று ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவானே கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil