Row Over Kaali Film Poster Tamil News: கனடா நாட்டின் டொராண்டோவில் உள்ள ஆகா கான் அருங்காட்சியகத்தில் பன்முக கலாச்சாரத்தை கொண்டாடும் வகையில் "ரிதம்ஸ் ஆஃப் கனடா" என்ற திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் எழுத்தாளர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளரான லீனா மணிமேகலையின் சமீபத்திய படைப்பான ‘காளி’ ஆவணப்படம் திரையிடப்பட்டது. இப்படத்தின் போஸ்டரை அவர் சமீபத்தில் பகிர்ந்திருந்த நிலையில், அந்த போஸ்டர் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது
அந்த ஆவணப்பட போஸ்டரில் இந்துக்களின் கடவுளான மகா காளி, சிகரெட் புகைப்பது போன்றும், ஒரு கையில் எல்ஜிபிடி சமூகத்தின் கொடியை ஏந்தியபடியும் இருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்து கடவுளை அவமதிக்கும் விதமாக வெளியிடப்பட்டுள்ள அந்த போஸ்டருக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
லீனா மணிமேகலை ஜூலை 2 அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் "Rhythms of Canada" இன் ஒரு பகுதியாக @AgaKhanMuseum இல் எனது சமீபத்திய திரைப்படம்-இன்று வெளியீட்டு விழாவைப் பகிர்வதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். எனது குழுவுடன் உந்தப்பட்டதாக உணர்கிறேன்." என்று அவர் ட்வீட் செய்திருந்தார்.
இந்த போஸ்டர் இணைய பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்ட நிலையில், மத உணர்வுகளை இழிவுபடுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட லீனா மணிமேகலையை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர். மேலும் #ArrestLeenaManimekalai என்ற ஹாஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகியது.
தமிழ் வார இதழான விகடனுக்கு மணிமேகலை அளித்த பேட்டியில், "ஒரு மாலை நேரத்தில் காளி தோன்றி டொராண்டோ தெருக்களில் உலா வரும்போது நடக்கும் சம்பவங்களைச் சுற்றி இப்படம் உருவாகிறது. போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் படத்தைப் பார்த்தால், ‘லீனா மணிமேகலையை கைது செய்யுங்கள்’ என்பதற்கு மேல் ‘லவ் யூ லீனா மணிமேகலை’ என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்துவார்கள்." என்று கூறியிருந்தார்.
தற்போது ‘காளி’ ஆவணப்படம் சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில், கனடாவின் ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர் இந்திய தூதரகம் சர்ச்சைக்குரிய 'காளி' ஆவணப்படத்தை திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆகா கான் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற 'அண்டர் தி டெண்ட்' நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக திரையிடப்பட்ட ஒரு ஆவணப்படத்தின் போஸ்டரில் இந்து கடவுளை அவமதித்ததாக கனடாவில் உள்ள இந்து மத தலைவர்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன.
டொராண்டோவில் உள்ள எங்கள் தூதரகம் இது குறித்து நிகழ்வின் அமைப்பாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், பல இந்து அமைப்புகள் கனடா அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும் எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், கனடா அதிகாரிகள் மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் சர்ச்சைக்குரிய அந்த திரைப்படம் சம்மந்தப்பட்ட அனைத்தையும் திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Please see a Press Released issued by @HCI_Ottawa @MEAIndia @IndianDiplomacy @PIB_India @DDNewslive @IndiainToronto @cgivancouver pic.twitter.com/DGjQynxYJS
— India in Canada (@HCI_Ottawa) July 4, 2022
இதற்கிடையில், உத்தரபிரதேச காவல்துறை தனது 'காளி' ஆவணப்படத்தில் "இந்து கடவுள்களை அவமரியாதையாக சித்தரித்ததற்காக" எழுத்தாளர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளரான லீனா மணிமேகலையின் மீது எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.
UP police register FIR on charges of criminal conspiracy, offense in place of worship, deliberately hurting religious sentiments, intention to provoke breach of peace against filmmaker Leena Manimekalai for her movie 'Kaali' about disrespectful depiction of Hindu Gods pic.twitter.com/YV97J23fcG
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) July 5, 2022
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.