ஒமிக்ரான் எழுச்சி: பாதிப்புகள் அதிகரித்த போதிலும் குறைவான மரணங்களே பதிவு.. கைக்கொடுத்த தடுப்பூசி!

2வது அலையுடன் ஒப்பிடும்போது, நோய்த்தொற்று எண்ணிக்கையின் விகிதத்தில் இறப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன.

covid-varian
Indian in third wave but fewer deaths were reported

இந்தியாவில் மூன்றாவது அலை உருவான இரண்டு வாரங்களில், கொரோனா இறப்புகளின் அதிகரிப்பு காணக்கூடியதாக உள்ளது, இருப்பினும் நோய்த்தொற்றுகளின் அதிகரிப்பு விகிதம் எங்கும் வேகமாக இல்லை.

நாடு முழுவதும் இந்த இறப்புகள், (கேரளா இல்லாமல்) – ஒரு மாதத்திற்கும் மேலாக இரட்டை இலக்கங்களில் இருந்த பிறகு, தற்போது மீண்டும் மூன்று இலக்கை நோக்கிச் செல்கின்றன. இருப்பினும், இரண்டாவது அலையுடன் ஒப்பிடும்போது, ​​நோய்த்தொற்று எண்ணிக்கையின் விகிதத்தில் இறப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன.

கடந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் நடுப்பகுதியில், இந்தியாவில் சராசரியாக 100 இறப்புகள் பதிவாகியுள்ளன, பாதிப்பு எண்ணிக்கை 15,000 முதல் 20,000 வரை இருந்தது. அதன் பிறகு இந்த எண்ணிக்கை கடுமையாக உயரத் தொடங்கியது.

அதற்குக் காரணம் முந்தைய அலையில், தினசரி பாதிப்புகளின் அதிகரிப்பு மிகவும் மெதுவாக இருந்தது. இந்த எண்ணிக்கை 12,000 லிருந்து 25,000 ஆக அதிகரிக்க ஒரு மாதத்திற்கும் மேலாக ஆனது. ஆனால் இதற்கு நேர்மாறாக, டிசம்பர் 28 அன்று ஒரு நாளைக்கு 10,000 க்கும் குறைவான பாதிப்புகளின் எண்ணிக்கை, இப்போது கிட்டத்தட்ட 1.8 லட்சமாக உயர்ந்துள்ளது.

நான்கு மாதங்களுக்கும் மேலாக இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொடர்பான இறப்புகளைப் புகாரளித்து வருவதால் இதில் கேரளா ஒரு விதிவிலக்கு ஆகும், இது 80 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. செப்டம்பருக்குப் பிறகு ஒவ்வொரு நாளும் சராசரியாக 242 இறப்புகள் மாநிலம் பதிவாகியுள்ளது.

கேரளாவிற்கு வெளியே, பெரும்பாலான மாநிலங்களில் இறப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்கமாக குறைந்துள்ளது – சில நாட்களில், 50க்கும் குறைவான இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்த நிலைகள் கடைசியாக 2020 இல் முதல் அலைக்கு முன்னால் காணப்பட்டன. அது இப்போது மாறி வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை, 86 இறப்புகளும், மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தில் முறையே 16, 17 மற்றும் 18 இறப்புகள் பதிவாகியுள்ளன.

ஒரு மாதத்திற்கு முன்பு, கிட்டத்தட்ட 20 மாநிலங்கள் பூஜ்ஜிய இறப்புகளைப் பதிவு செய்தன. அந்த எண்ணிக்கை இப்போது ஒரு டசனாகக் குறைந்துவிட்டது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத் அல்லது ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில், கடந்த மூன்று மாதங்களில் மிகக் குறைவான இறப்புகளே பதிவாகியுள்ளன. சில நேரங்களில் பத்து நாட்களில் ஒன்று அல்லது இரண்டு.

இவற்றிலும், பிற மாநிலங்களிலும், தினசரி அடிப்படையில் அதிக இறப்புகள் இப்போது பதிவு செய்யப்படுகின்றன.

மூன்றாவது அலையை ஏற்படுத்தும் ஓமிக்ரான் மாறுபாடு, நோயின் லேசான வடிவத்தை உருவாக்குவதாக அறியப்படுகிறது. மேலும் குறைவான மக்கள் தீவிர நோய்களை உருவாக்குவார்கள் அல்லது தீவிர சிகிச்சை தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக, ஒமிக்ரான் மாறுபாடு எவ்வளவு லேசானது, தடுப்பூசிகள் எவ்வளவு பயனுள்ளதாக இருந்தன மற்றும் எழுச்சியை சமாளிக்க அரசாங்கம் எவ்வளவு தயாராக உள்ளது என்பதை இப்போது இறப்பு எண்ணிக்கையின் பாதை வெளிப்படுத்தும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Indian in third wave but fewer deaths were reported

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express