டெல்லியில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த வந்த ஆப்கான் தீவிரவாதி

டெல்லி வந்து இறங்கியதில் இருந்து அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மறைமுகமாக செய்து அவரை கைது செய்த இந்திய உளவுத்துறை

ஆப்கான் நாட்டைச் சேர்ந்த பெரும் பணக்காரர் ஒருவரின் மகன், தன்னை ஐஎஸ் தீவிரவாத அமைப்புகளுடன் ஈடுபடுத்திக் கொண்டார். அவருடன் 12 நபர்கள் பாகிஸ்தானில் இருக்கும் ஒரு பகுதியில் தீவிரவாத பயிற்சிகளை மேற்கொண்டனர்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திட்டத்தினை செயல்படுத்தக் கோரி வெவ்வேறு பகுதிகளுக்கு அனுப்பியிருக்கிறது தீவிரவாத அமைப்பு. முப்பது வயதிற்கும் குறையாத இந்நபர் இந்தியாவில் இருக்கும் புது டெல்லியில் தாக்குதல் நடத்துவதற்காக வந்துள்ளார்.

இத்திட்டத்திற்காக சுமார் 50,000 அமெரிக்க டாலர்களை இவருக்கு துபாயில் இருந்து அளித்திருக்கிறார்கள். இந்த ஐஎஸ் அமைப்பின் செயல்பாடுகளை தொடர்ந்து கவனித்து வந்த அமெரிக்க உளவுத்துறை, இந்தியாவிற்கு இத்தாக்குதல் குறித்து எச்சரிக்கை செய்தது.

சுதாகரித்துக் கொண்ட இந்திய உளவு அமைப்பு நம்பத்தகுந்த வட்டாரங்களின் உதவியுடன், இந்தியாவிற்கு வந்த அத்தீவிரவாதிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வந்துள்ளது.

லஜிபத் பகுதியில் இருக்கும் ஒரு அடிக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் அவரை தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளையும் மறைமுகமாக செய்திருக்கிறது இந்திய உளவுத்துறை. மேலும் அவரின் ஒவ்வொரு செயல்பாட்டினையும் கண்காணிக்க சுமார் 80 அதிகாரிகளை நியமித்திருக்கிறார்கள்.

டெல்லி வந்த அவர், தன்னை ஃபரிதாபாத் அருகில் இருந்த கல்லூரியில் சேர்ந்து கொண்டார். மேலும் அந்நபர், டெல்லியில் இருக்கும் டெல்லி விமான நிலையம், அன்சல் ப்ளாசா மால், வசந்த் கஞ்ச் மால், தெற்கு எக்ஸ்டென்சன் மார்க்கெட், மற்றும் இதர பகுதிகளை அவர் பார்வையிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தாக்குதல் நடத்துவதற்காக கேட்கப்பட்ட பொருட்கள் அனைத்தையும் ஒரு இந்தியர் அவருக்கு வாங்கிக் கொடுத்துள்ளார். 2017ஆம் ஆண்டு இங்கிலாந்து மான்செஸ்டர் பகுதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த பயன்படுத்திய அதே பொருட்களைத் தான் அவரும் கேட்டிருக்கிறார்.

ISIS

ஆப்கான் தீவிரவாதி இந்தியா வந்ததில் இருந்து நடைபெற்ற நிகழ்வுகள்

இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் அந்நபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சில நாட்களிலேயே அவர் ஆப்கானில் இருக்கும் அமெரிக்க உளவு அமைப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டர்.

கடந்த சில மாதங்களாக அமெரிக்கா தாலிபானிற்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்து வருவதற்கு இவர் கூறிய வாக்குமூலம் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இத்தனை நாட்களாக இந்த விசாரணை மிகவும் ரகசியமாக நடத்தப்பட்டது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிற்கு மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிடிப்பட்ட நபரின் உதவியை பயன்படுத்தி பாகிஸ்தான் மற்றும் ஆப்கான் பகுதியில் இருக்கும் பல்வேறு தீவிரவாத இயக்கங்களை அழிப்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது அமெரிக்க ராணுவம்.

×Close
×Close