கொரோனா தொற்றுநோயின் உச்சத்தில் சிங்கப்பூரை விட்டு வெளியேற முயன்ற 26 வயதான இந்திய வாலிபருக்கு திங்களன்று ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த பாலச்சந்திரன் பார்த்திபன், சிங்கப்பூர் வேலை செய்து வருகிறார். சிங்கப்பூர் முழுவதும் கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மே 23 அன்று பாலச்சந்திரனுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு காய்ச்சல் மற்றும் தொண்டைப் புண் இருந்துள்ளது. அவர் கொரோனா பரிசோதனைக்காக சிங்கப்பூர் பொது மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு கொரோனா சோதனைக்கு சளி மாதிரி கொடுத்த பின்னர் காய்ச்சல் வார்டுக்கு அனுப்பட்டார். ஆனால் பாலச்சந்திரன் மருத்துவமனையில் இருந்து அனுமதியின்றி வெளியேறி, விமான நிலையம் வந்துள்ளார். இதற்காக அவர் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தியுள்ளார்.
அவர் விமான நிலையம் வந்த பின்னர் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சோதனை முடிவுகள் வெளியானது. பாலச்சந்திரன் இந்தியா திரும்புவதற்காக டிக்கெட் வாங்க முயற்சித்துள்ளார். ஆனால் அவருக்கு டிக்கெட் கிடைக்கப்பெறவில்லை. பின்னர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, அவர் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மற்றவர்களை நோய்த்தொற்று அபாயத்திற்கு உட்படுத்தியது மற்றும் சுகாதார அதிகாரியிடம் அவமதிக்கும் சொற்களைப் பயன்படுத்தியது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டது. கொரோனா சட்டங்களை மீறிய ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும், பாலச்சந்திரன் ஆறு மாதங்கள் வரை சிறையில் அடைக்கப்படலாம் அல்லது எஸ்ஜிடி 10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம், அல்லது இரண்டும் இருக்கலாம் என்ற நிலையில் தற்போது 9 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாலச்சந்திரன் ஏற்கனவே கொரோனா பாதித்து சிகிச்சை பெற்றுள்ளார். அப்போதும் சிகிச்சைக்கு பிறகான தனிமைப்படுத்தலை கடைபிடிக்காமல், இந்தியா செல்ல அவர் முயற்சித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil