/tamil-ie/media/media_files/uploads/2018/10/Dod-hMQUcAAgaai.jpg)
மகாத்மா காந்தி 150வது பிறந்தநாள்
மகாத்மா காந்தி 150வது பிறந்தநாள் : இன்று இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த தினம். கரம்சந்த் உத்தம் சந்த் காந்திக்கும் புட்லிபாய்க்கும் மகனான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அக்டோபர் 2, 1896ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்திலுள்ள போர் பந்தர் என்னும் இடத்தில் பிறந்தார்.
மகாத்மா காந்தி 150வது பிறந்தநாள் தலைவர்கள் அஞ்சலி
இன்று அவருக்கு 150வது பிறந்த நாள். அகிம்சையின் வலிமையை உலகறியச் செய்த அண்ணலின் பிறந்த தினத்தில் அவரின் நினைவிடத்திற்கு தலைவர்கள் நேரில் சென்று மலர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி டெல்லி ராஜ்காட்டில் இருக்கும் காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
#WATCH Prime Minister Narendra Modi pays tribute to #MahatmaGandhi at Rajghat. #Gandhi150pic.twitter.com/l2kk3bHeGf
— ANI (@ANI) 2 October 2018
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அண்ணல் காந்தியடிகளின் சமாதிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் தற்போதைய தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் நேரில் சென்று மலர் தூவி அவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2018/10/DoeCLhLUwAAMkTu.jpg)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.