ஓமனில் உள்ள மசூதியில் திங்கள்கிழமை மாலை நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். மத்திய கிழக்கின் மிகவும் உறுதியான நாடுகளில் ஒன்றின் பாதுகாப்பில் அரிதான அத்துமீறலில், உள்ளூர் அதிகாரிகள் உயிரிழந்தவர்களில் மூன்று தாக்குதல்காரர்களும் அடங்குவர் என்பதை உறுதிப்படுத்தியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஓமனில் உள்ள இந்தியத் தூதரகம் சமூக ஊடக தளமான எக்ஸ் பக்கத்தில் இந்திய குடிமகனின் மரணத்தை அறிவித்தது மற்றும் மஸ்கட்டில் உள்ள அலி பின் அபி தாலிப் மசூதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மற்றொரு இந்தியர் காயமடைந்துள்ளதாகவும் கூறியது.
Following the shooting incident reported in Muscat city on 15 July, Foreign Ministry of Sultanate of Oman has informed that one Indian national has lost his life & another is injured. Embassy offers its sincere condolences & stands ready to offer all assistance to the families.
— India in Oman (Embassy of India, Muscat) (@Indemb_Muscat) July 16, 2024
எக்ஸ் பதிவில், “ஜூலை 15 அன்று மஸ்கட் நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, ஓமன் சுல்தானட்டின் வெளியுறவு அமைச்சகம், ஒரு இந்தியர் உயிரிழந்ததாகவும், மற்றொருவர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது. தூதரகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது மற்றும் குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளது,” என்று பதிவிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானிய மற்றும் ஓமனிய அதிகாரிகளின் கூற்றுப்படி, தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் நான்கு பாகிஸ்தான் பிரஜைகள் மற்றும் ஒரு போலீஸ்காரரும் அடங்குவர். பாதுகாப்புப் படையினர் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 28 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இமாம் அலி மசூதி என உள்நாட்டில் அழைக்கப்படும் சன்னி ஆதிக்கம் செலுத்தும் ஓமனில் உள்ள ஷியைட் மசூதியில் இந்த தாக்குதல் நடந்தது, 7 ஆம் நூற்றாண்டில் முஹம்மது நபியின் பேரன் ஹுசைன் இறந்ததை நினைவுகூரும் வகையில், ஷியா முஸ்லிம்கள் அஷுராவை அனுசரித்தபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது. பொதுவாக ஓமனில் இல்லாவிட்டாலும், சில நாடுகளில் சன்னி மற்றும் ஷியா முஸ்லிம்களுக்கு இடையே ஆஷுரா அனுசரிப்பு அவ்வப்போது குறுங்குழுவாத பதட்டங்களைத் தூண்டியுள்ளது.
இதனிடையே, துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து மஸ்கட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. "அமெரிக்க குடிமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், உள்ளூர் செய்திகளை கண்காணிக்க வேண்டும் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் வழிகாட்டுதல்களுக்கு செவிசாய்க்க வேண்டும்" என்று தூதரகம் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.