Advertisment

இந்திய கடற்படையில் 2,585 அக்னி வீரர்கள்: 273 பெண் மாலுமிகள் முதல் முறையாக தேர்வு

பாஸிங் அவுட் அணிவகுப்பை மதிப்பாய்வு செய்த கடற்படைத் தலைவர் அட்மிரல் ஆர் ஹரி குமார், அக்னிபாத் திட்டத்தில் முதன்முதலில் பெண் மாலுமிகள் தேர்வானது "இந்திய கடற்படைக்கு சரித்திரம்" என்றார்.

author-image
WebDesk
New Update
Indian Navy first batch of women sailors as 2,585 Agniveers pass out Tamil News

Indian Navy Agniveers women sailors Tamil News: அக்னிபாத் திட்டம் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், பதினேழரை வயது முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்கள், இளம்பெண்கள் 4 ஆண்டுகள் முப்படைகளில் சேர்ந்து பணியாற்றாலம். பணியில் சேர்வதற்கு முன்பு 6 மாத காலத்திற்கு பயிற்சி வழங்கப்படும்.

Advertisment

இந்நிலையில், இந்தியக் கடற்படையானது, அக்னிபாத் ஆட்சேர்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி, பெண் அக்னி வீரங்கனைகளை சேவையில் சேர்க்கத் தொடங்கும் வாய்ப்பை உருவக்கியது. அதன் அடிப்படையில், இந்திய கடற்படை 2,585 அக்னி வீரர்களை தகுதி பெற்றவர்களாக தேர்வு செய்துள்ளது. இதில் 273 பேர் அக்னி வீரங்கனைகள் ஆவார்.

இந்தியக் கடற்படையின் அக்னி வீரர்கள் முதல் பேட்ஜ் ஒடிசாவில் உள்ள ஐஎன்எஸ் சில்கா போர்டல்களில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை தெற்கு கடற்படைக் கட்டளையின் கீழ் நடத்தப்பட்ட அதன் முதல் பாஸிங் அவுட் அணிவகுப்பில் கலந்து கொண்டனர். பாஸிங் அவுட் அணிவகுப்புகள் (POPs) பாரம்பரியமாக காலை நேரங்களில் நடத்தப்படுகின்றன என்றாலும், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு இரவில் நடத்தப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இதுவே இந்திய ஆயுதப் படைகளில் முதல் முறையாகும்.

16 வார கடின கடற்படை பயிற்சியின் வெற்றிகரமான உச்சக்கட்டத்தை பாசிங் அவுட் அணிவகுப்பு குறிக்கும். இந்திய கடற்படையை போர் தயார், நம்பகமான, ஒருங்கிணைந்த மற்றும் எதிர்கால ஆதாரப் படையாக மாற்ற கடல் வீரர்கள் பயிற்சி பெற்றுள்ளனர் என்று இந்திய கடற்படையின் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

navy
Though passing out parades (POPs) are traditionally conducted in the morning hours, it was the first occasion when the PoP was conducted post-sunset, a first-of-its-kind in the Indian Armed Forces. (Express Photo)

பாஸிங் அவுட் அணிவகுப்பை மதிப்பாய்வு செய்த கடற்படைத் தலைவர் அட்மிரல் ஆர் ஹரி குமார், இந்த நிகழ்வில் முதன்முதலில் பெண் மாலுமிகள் தேர்வானது "இந்திய கடற்படைக்கு சரித்திரம்" என்றார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், “நம் நாரி சக்தியை (Nari Shakti) உலகுக்குக் காட்ட இது ஒரு வாய்ப்பு. தேசம் பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், நமது பெண் மாலுமிகள் ஐஎன்எஸ் சில்காவைக் கடக்கிறார்கள். நாட்டின் முழு தலைமுறை இளம் பெண்களுக்கும் இது உத்வேகத்தை அளிக்கும்.

தேர்ச்சி பெறுபவர்கள் தங்கள் திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ளவும், அறிவாற்றல், கற்கும் விருப்பம் மற்றும் எதிர்காலத்தில் அந்தந்த தொழில்களில் சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் வலுவான அடித்தளத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இந்தியக் கடற்படையின் முக்கிய மதிப்புகளான கடமை, மரியாதை மற்றும் தைரியத்தை நிலைநாட்ட வேண்டும்

அக்னிவீரர்களின் முதல் பேட்ஜ் இந்தியாவின் முதல் அக்னிவீரர்களாக மாறி, இந்தியக் கடற்படையில் புதிய யுகத்தைத் தொடங்குவதன் மூலம் வரலாற்றை எழுதப் போகிறது.

அக்னிவீரர்களின் முதல் பேட்ஜ் எதிர்கால அக்னிவீரர்களுக்கு ஜோதியாக செயல்படுவார்கள். இந்தியக் கடற்படையில் சேர்வதன் மூலம் எதிர்கால அக்னிவீரர்கள் இந்தியாவின் பாதுகாப்பின் ஒரு பகுதியாக எப்படி இருக்க முடியும் என்பதை இந்த பேட்ஜில் உள்ள வீரர்கள் தீர்மானிப்பார்கள். அதுமட்டுமின்றி, ஆயுதப்படையில் இல்லாமல் தேசத்தை கட்டியெழுப்புவதில் எவ்வாறு பங்களிப்பது என்பதையும் இந்த அக்னிவீரர்கள் தீர்மானிப்பார்கள்.

இந்தியாவும் இந்திய கடற்படையும் வேகமாக வளர்ந்து வருகிறது. அக்னிவீரர்கள் வளர்ச்சியின் ஒரு பகுதியாக இருப்பது அதிர்ஷ்டம். அவர்கள் உலகம் முழுவதும் மிகவும் போற்றப்படும் தொழில்களில் ஒன்றாக அடியெடுத்து வைக்கிறார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும்" என்றும் அவர் கூறினார்.

இந்த பாசிங் அவுட் அணிவகுப்பில், துணை அட்மிரல் எம்.ஏ.ஹம்பிஹோலி, தென் கடற்படைக் கட்டளைத் தளபதி, பிரபல தடகள வீராங்கனையும் நாடாளுமன்ற உறுப்பினருமான பி.டி.உஷா, விளையாட்டு வீராங்கனை மிதாலி ராஜ் மற்றும் கடற்படை வீரர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

India Indian Navy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment