Advertisment

பெருமைமிகு தருணம்: இந்திய கடற்படையில் முதல் பெண் பைலட் நியமனம்

மீண்டும் இந்தியாவே மகிழ்ச்சியடைவதற்கும், பெருமையடைவதற்கும் ஏற்ற சாதனை அரங்கேறியுள்ளது. இந்திய கடற்படையில் முதல் பெண் பைலட் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Shubhangi Swaroop ,First Indian Lady Navy Pilot, Indian Navy Naval Academy,

மீண்டும் இந்தியாவே மகிழ்ச்சியடைவதற்கும், பெருமையடைவதற்கும் ஏற்ற சாதனை அரங்கேறியுள்ளது. இந்திய கடற்படையில் முதல் பெண் பைலட் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

Advertisment

ஏற்கனவே, இந்திய விமான படையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு மூன்று பெண் பைலட்டுகள் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்திய கடற்படையில் முதல் பெண் பைலட் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

உத்தரபிரதேச மாநிலம் பேர்லி மாவட்டத்தை சேர்ந்த சுபாங்கி ஸ்வரூப் என்பவர் தான் இந்த சாதனைக்கு சொந்தக்காரர். கடற்படை ஆயுதங்கள் பிரிவில் பெண் பைலட்டாக நியமிக்கப்படுவது இதுவே முதன்முறை. "இது வியக்கத்தக்க வாய்ப்பு மட்டுமல்ல, மாபெரும் கடமையும் கூட", என, சுபாங்கி ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத் நகரத்தில் உள்ள துண்டிகல் விமானப்படை பயிற்சி நிறுவனத்தில் சுபாங்கி ஸ்வரூப் பயிற்சி பெறவிருக்கிறார்.

கடற்படையின் இந்த நியமனம், பாதுகாப்பு படையில் பெண்களின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைகிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment