கத்தார் எமிரி கடற்படைக்கு, பயிற்சி மற்றும் பிற சேவைகளை வழங்கும் நிறுவனத்துடன் கத்தாரில் பணிபுரியும் எட்டு முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள், அந்நாட்டில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தோஹாவில் உள்ள இந்திய தூதரகம் அறிந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டாக்டர் மீத்து பார்கவா(@DrMeetuBhargava) என்பவரின் ட்வீட்டிற்குப் பிறகு இந்த சம்பவம் செவ்வாயன்று வெளிச்சத்திற்கு வந்தது. அவர் தனது ட்விட்டர் பயோவில் 'கல்வியாளர் மற்றும் ஒரு ஆன்மீகவாதி என்று குறிப்பிட்டுள்ளார்.
படைவீரர்கள் தோஹாவில் 57 நாட்களாக, சட்டவிரோத காவலில் இருப்பதாக அவர் கூறினார்.
இந்த இடுகையில் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் பூரி உட்பட பல அமைச்சர்கள் டேக் செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் கடற்படை அதிகாரிகள் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் கண்டறிந்தது. இந்நிறுவனம் கத்தார் பாதுகாப்பு மற்றும் பிற அரசு நிறுவனங்களின் "உள்ளூர் வணிக பங்குதாரர்" என்றும், பாதுகாப்பு உபகரணங்களின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு போன்ற அதன் முக்கிய திறன்களை விவரிக்கிறது.
இந்த குழுவின் சீஇஓ, காமிஸ் அல் அஜ்மி, ராயல் ஓமன் விமானப்படையின் ஸ்க்ராட்ரான் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர்.
காவலில் உள்ள எட்டு இந்தியர்களில், கமாண்டர் பூர்ணேந்து திவாரி (ஓய்வு), நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். இவர் 2019 ஆம் ஆண்டு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து பிரவாசி பாரதிய சம்மான் விருதைப் பெற்றார்.
அவர் இந்தியக் கடற்படையில் பணிபுரிந்தபோது ஒரு மைன்ஸ்வீப்பர் மற்றும் ஒரு பெரிய ஆம்பிபியஸ் போர்க்கப்பலுக்கு கமண்டராக இருந்ததாக நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ள அவரது சுயவிவரம் கூறுகிறது.
இவர்கள் எதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் என்ன என்பது பற்றிய விவரங்கள் எதுவும் இல்லை. இந்த மாத தொடக்கத்தில் தோஹாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளால் அவர்களுக்கு தூதரக வருகை வழங்கப்பட்டது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் கண்டறிந்தது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சியிடம் தொடர்பு கொள்ள முயன்ற போது, எந்த ஒரு பதிலும் இல்லை.
நிறுவனம் தனது இணையதளத்தில் ஈர்க்கக்கூடிய சான்றுகளை கொண்டுள்ளது. அதன் பணி, தோஹாவில் உள்ள இந்திய தூதரகத்தின் பாராட்டைப் பெற்றுள்ளது.
தூதர் தீபக் மிட்டல், கத்தார் பாதுகாப்புப் படைகளின் திறன்களை உருவாக்குவதற்கு நிறுவனம் சிறந்த பணியை செய்து வருவதாகக் கூறினார்.
நட்பு நாடுகளுடன் கூட்டாளியாக இருப்பதற்கும், எங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் இந்தியத் தலைமையின் தொலைநோக்குப் பார்வைக்கு நீங்கள் சான்றாக இருக்கிறீர்கள் என்று அவர் கூறினார்.
முந்தைய தூதராக இருந்த பெரியசாமி குமரன், இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை திறம்பட வெளிப்படுத்தியதற்காகவும், இரு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பிற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கியதற்காகவும் நிறுவனத்தின் பணியை பாராட்டினார்.
இந்த சம்பவம் தொடர்பாக நிறுவனத்தின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டபோது பதிலளிக்கவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“