/indian-express-tamil/media/media_files/UQfwZfIHr6sl012yMzZA.jpg)
EAM S Jaishankar (File Photo)
சீனாவின் கடல்சார் ஊடுருவல்கள் அதிகரித்து வருவது குறித்த கவலைகளின் பின்னணியில், இந்தியப் பெருங்கடல் சீர்குலையும் மாற்றங்களைக் தயாராக உள்ளது, இந்தியா அதற்குத் தயாராக வேண்டும், என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்,
ஒரு சிந்தனைக் குழுவில் அமர்வின் போது பேசிய ஜெய்சங்கர், எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிடாமல்,’இந்தியாவின் அண்டை நாடுகளில் காணப்பட்ட போட்டி இந்தியப் பெருங்கடலிலும் நிச்சயம் நடக்கும். மேலும் இந்தியா போட்டியிட வேண்டும், அதைத்தான் அது செய்ய முயற்சிக்கிறது. அதைப் பற்றி புலம்புவதில் அர்த்தமில்லை.
இந்தியப் பெருங்கடல் முன்பு இல்லாத கடல்சார்இருப்பின் தொடக்கத்தை காண்கிறது என்று நினைக்கிறேன். எனவே இது ஒரு சீர்குலையும் மாற்றத்திற்கு தயாராக உள்ளது. நாம் அதை எதிர்பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன், மேலும் அதற்கு நாம் தயாராக வேண்டும்’, என்று அவர் கூறினார்.
இந்திய கடற்படையின் கொல்லைப்புறமாக கருதப்படும் இந்தியப் பெருங்கடலில் சீனா படிப்படியாக தனது இருப்பை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Read in English: Indian Ocean poised to see ‘disruptive’ changes: Jaishankar
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.