Advertisment

அதிகரித்து வரும் கொரோனா தொற்று : ஆலோசனையில் பிரதமர் மோடி பேசியது என்ன?

Tamil National Update : ஆலோசனைக்கூட்டத்தில் தடுப்பூசி பணிகள், மருத்துவ உட்கட்டமைப்புகளை தயார்படுத்துதல் போன்றவை குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது

author-image
WebDesk
New Update
அதிகரித்து வரும் கொரோனா தொற்று : ஆலோசனையில் பிரதமர் மோடி பேசியது என்ன?

Covid 19 and Omicron rise In indian : இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், கொரோனாவின் உருமாறிய வகையான ஒமைக்ரான் தொற்று பெரும் அச்சுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மே மாதத்தில் தீவிரமடைந்த கொரோனா தொற்றின் 2-வது அலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், காடந்த மாதம் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியது.

Advertisment

தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியை நெருங்கி வருகிறது. பலி எண்ணிக்கையும் கனிசமாக உயர்ந்து வருவதால், தொற்று பாதிப்பை தடுக்கும் வகையில் தீவிரபாதுகாப்பு நடவடிக்கைகளில் மாநில அரசு முழு மூச்சாக களமிறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது,

மேலும் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும், என்றும் முககவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் அதிகம் கூடும் அரசியல் பொதுக்கூட்டங்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் அசாதாரன சூழல் நிலவி வரும் நிலையில், கொரோனா தொற்று அதிகரித்து வருவது குறித்து பிரதமர் மோடி உயர் அதிகரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் தடுப்பூசி பணிகள், மருத்துவ உட்கட்டமைப்புகளை தயார்படுத்துதல் போன்றவை குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனா தொற்றின் உருமாறிய வகையினா ஒமைக்ரான் தொற்று நாடு முழுவதும் அதிகரித்து வருவதால், அதனை தடுக்க தீவிர கட்டுப்பாட்டைத் தொடர வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார்.

அதிக எண்ணிக்கையிலான பாதப்புகள் குறித்து புகாரளிக்கும் கிளஸ்டர்களில் செயலில் கண்காணிப்பு, தொற்று வேகமாக அதிகரித்து வரும் மாநிலங்களுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல், முககவசம், சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் அவசியம் கொரோனா தொற்று குறித்து மரபணு வரிசைமுறை உள்ளிட்ட சோதனைகள், தடுப்பூசிகள், மருந்தியல் தலையீடுகள் ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

மேலும் ஜனவரி மாத இறுதியில் தொடங்கும் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக, மக்களவை மற்றும் ராஜ்யசபா செயலகங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், சுமார் 400 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். மேலும் சட்டசபை தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் வழங்கப்படும் கொரோனா சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் படம் இருக்காது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இந்தியா தொடர்ந்து இரண்டாவது நாளாக தினசரி 1.5 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா பாதிப்புகளை உறுதி செய்துள்ளது., மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 1,59,632 புதிய பாதிப்புகளும், 327 மரணங்களும் பதிவாகியுள்ளன.  இதற்கிடையில், இந்தியாவில் ஓமிக்ரான் எண்ணிக்கை 3,623 ஐ எட்டியுள்ளது, மகாராஷ்டிரா (1,009) தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி விரைவில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கொரோனா தொற்று அதிகரித்து வருவது குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் உடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pm Modi Covid 19 In India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment