காங்கிரஸில் இணைய பிரசாந்த் கிஷோர் மறுப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

அரசியல் வியூகவாதி பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கான வாய்ப்பை நிராகரித்துள்ளார்.

Prashant-kishor-
Indian political strategist Prashant Kishor Declines Offer To Join Congress

2024 லோக்சபா தேர்தலில் கட்சியை வழிநடத்த சோனியா காந்தி அமைத்த அதிகாரம் பெற்ற செயல் குழுவின் (Empowered Action Group 2024) உறுப்பினராக கட்சியில் சேரும் காங்கிரஸின் வாய்ப்பை அரசியல் வியூகவாதி பிரசாந்த் கிஷோர் நிராகரித்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில்; ”அதிகாரம் பெற்ற குழுவில் கிஷோருக்கு வரையறுக்கப்பட்ட பொறுப்புடன் ஒரு பதவி வழங்கப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி’ பிரசாந்த் கிஷோருடனான விளக்கக்காட்சி மற்றும் கலந்துரையாடலைத் தொடர்ந்து, அதிகாரமளிக்கப்பட்ட செயல் குழு 2024 ஐ உருவாக்கி, அதன் ஒரு பகுதியாக வரையறுக்கப்பட்ட பொறுப்புடன் கட்சியில் சேர அவரை அழைத்தார். ஆனால் பிரசாந்த் மறுத்துவிட்டார். கட்சிக்கு அளிக்கப்பட்ட அவரது முயற்சிகள் மற்றும் பரிந்துரைகளை நாங்கள் பாராட்டுகிறோம்”, என்று சுர்ஜேவாலா ட்வீட் செய்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், பிரசாந்த் கிஷோரும் ட்வீட் செய்தார். அதில் “அதிகாரம் பெற்ற செயல் குழுவின் ஒரு பகுதியாக கட்சியில் சேரவும், தேர்தலுக்கு பொறுப்பேற்கவும் காங்கிரஸின் தாராளமான வாய்ப்பை நான் நிராகரித்தேன். என் தாழ்மையான கருத்துப்படி, கட்சிக்கு என்னை விட’ ஆழமாக வேரூன்றியிருக்கும் கட்டமைப்பு சிக்கல்களை, சீர்திருத்தங்கள் மூலம் சரிசெய்வதற்கான தலைமையும் கூட்டு விருப்பமும் தேவை. ,” என்று காங்கிரஸ் தனது முடிவை அறிவித்த சிறிது நேரத்திலேயே கிஷோர் ட்வீட் செய்தார்.

கடந்த மாதம் கிஷோர், கட்சித் தலைவர் சோனியா காந்தியுடன் தொடர் சந்திப்புகளை நடத்தி, கட்சியை புத்துயிர் பெறுவதற்கான தனது திட்டங்களைப் பற்றி விரிவாக விளக்கினார்.

கடந்த இரண்டு லோக்சபா தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. மேலும் கடந்த 7 ஆண்டுகளில் பல மாநிலங்களை இழந்துள்ளது, தற்போது ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.

காங்கிரஸ் தலைவர்களின் கூற்றுப்படி, கிஷோர் எந்த பதவியையும் ஆணையையும் கோரவில்லை, ஆனால் அமைப்பை மறுசீரமைப்பது முதல் பொது செய்தி அனுப்புவது வரை செயல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வற்புறுத்தினார்.

இதைத் தொடர்ந்து’ உயர்மட்டக் கூட்டத்திற்குப் பிறகு, 2024 லோக்சபா தேர்தலில் கட்சியை வழிநடத்தும் வகையில், அதிகாரம் பெற்ற செயல் குழுவை அமைப்பதாக சோனியா காந்தி நேற்று அறிவித்தார். மே 13 முதல் மே 15 வரை ராஜஸ்தானின் உதய்பூரில் நடைபெறும் மூன்று நாள் “சிந்தன் ஷிவிர்” க்கு தயாராவதற்கு பல குழுக்களை உருவாக்குவதாகவும் அவர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Indian political strategist prashant kishor declines offer to join congress

Exit mobile version