Advertisment

அரசியலும், யாத்திரையும்! ஒரு நீண்ட அரசியலின் ஆழமான பக்கங்கள்

இந்திய அரசியலில் யாத்திரைகள், நீண்ட காலமாக ஆழமான மதிப்பைக் கொண்டுள்ளன.

author-image
WebDesk
New Update
Bharata Jodo Yatra

கன்னியாகுமரியில் வியாழக்கிழமை 'பாரத் ஜோடோ யாத்திரை'யின் போது மூத்த தலைவர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களுடன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் ஜோடோ யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கி உள்ளார். இந்திய அரசியலில் யாத்திரைகள், நீண்ட காலமாக ஆழமான மதிப்பைக் கொண்டுள்ளன, மேலும் பெரும் பலனைக் கொடுத்துள்ளன.

Advertisment

1,200 கி.மீ

ஏப்ரல் 6 மற்றும் ஜூன் 1, 2022 க்கு இடையில், குஜராத்தில் உள்ள காந்தி ஆசிரமத்தில் தொடங்கி, டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் முடியும், 1,000 கிமீ ‘ஆசாதி கௌரவ் யாத்திரை’யை காங்கிரஸ் நடத்தியது.

இந்த யாத்திரை இந்தியாவின் 75 ஆண்டுகால சுதந்திரத்தைக் குறிக்கும் வகையில் இருந்தது, அதில் காங்கிரஸின் பங்களிப்பை அடிக்கோடிட்டுக் காட்டியது. அதேநேரம் மோடி அரசாங்கம், இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு விழாவான, ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்வை முன்னெடுத்துச் சென்றது,

‘1.32 லட்சம் கி.மீ.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் குஜராத்தில் நடந்த ஒரு நிகழ்வில், மாநில பாஜக தலைவர் சி ஆர் பாட்டீல், கடந்த இரண்டு ஆண்டுகளில் 1.32 லட்சம் கிமீ பயணம் செய்துள்ளதாகவும், மாநிலம் முழுவதும் 841 நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாகவும் கூறினார். இவரது சுற்றுப்பயணம், 33 மாவட்டங்கள் மற்றும் 7 பெருநகரங்களை  உள்ளடக்கியது. பூகோளத்தின் ஒரு சுற்றுப்பாதையை முடிக்க சுமார் 40,000 கிமீ ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

* 12,000 கி.மீ

உத்தரப் பிரதேசத்தில் பிப்ரவரி-மார்ச் சட்டமன்றத் தேர்தலுக்கு, முன்னதாக, காங்கிரஸ் மாநிலத்தின், 403 தொகுதிகளில் 12,000 கிமீ தூரம் செல்லும் “பிரதிக்யா யாத்திரை”யை அறிவித்தது. பிரியங்கா காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்த, யாத்திரை ஒவ்வொரு கட்டமாக நடைபெற்றது. ஆனால், அதைத் தொடர்ந்து நடந்த வாக்கெடுப்பில் காங்கிரஸின் வெற்றிக்கு இந்த யாத்திரை பெரிதாக உதவவில்லை. கட்சி இரண்டு இடங்களை வென்றது, மேலும் பிரியங்கா மாநிலத்தின் மீதான ஆர்வத்தை இழந்துவிட்டதாக தலைவர்கள் புகார் கூறினர்.

* 19,567 கி.மீ

ஆகஸ்ட் 2021 இல், பாஜக ஐந்து நாள் "ஜன் ஆஷிர்வாத் யாத்ரா" ஒன்றைத் தொடங்கியது, இதன் ஒரு பகுதியாக 39 மத்திய அமைச்சர்கள் 19,567 கி.மீ.க்கு மேல் பயணம் செய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன் 22 மாநிலங்களைச் சுற்றி வரப் புறப்பட்டனர். மோடி அமைச்சரவையில் இப்போது நடைபெற்ற மாற்றத்தைத் தொடர்ந்து மந்திரிகளை மக்களுக்கு "அறிமுகப்படுத்துவது" என்பது வெளிப்படையான நோக்கமாக இருந்தது. எனவே இந்த யாத்திரை ஒரு "பெரிய வெற்றி" என்று கட்சி கூறியது.

* 3,648 கி.மீ

நவம்பர் 2017 மற்றும் ஜனவரி 2019 க்கு இடையில், ஒய்எஸ்ஆர்சிபி தலைவர் ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டி, 341 நாட்களில் மாநிலம் முழுவதும் 3,648 கிமீ “பிரஜா சங்கல்ப யாத்திரை” மேற்கொண்டார். அந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில் ஒய்எஸ்ஆர்சிபி 175 இடங்களில் 151 இடங்களை வென்று,  வெற்றி பெற்றது. தற்போதைய தெலுங்கு தேசம் கட்சி, 23 இடங்களை மட்டுமே வென்றது.

ஜெகன் தனது மறைந்த தந்தை ஒய் ராஜசேகர் ரெட்டியின் அடிச்சுவடுகளைப் பின்பற்றினார், அவர் ஏப்ரல் 2003 இல் 1,400 கிமீ பாதயாத்திரையை மேற்கொண்டார், அது அடுத்த ஆண்டு காங்கிரஸை ஆட்சிக்குக் கொண்டுவந்தது.

* 3,000 கி.மீ

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங், 2017ல், 3,000 கி.மீ., தூரம் 'நர்மதா பரிக்ரமா' யாத்திரையை நடத்தினார். ஆறு மாத கால பரிக்ரமா' முழுக்க முழுக்க ஒரு மத மற்றும் ஆன்மீக பயிற்சி. இதில் அரசியல் எதுவும் கூடாது என்றார். இந்த முயற்சி மாநிலத்தில் அரசியல் ரீதியாக பலன் தரும் என்று திக்விஜய் தெளிவாக நம்பினாலும், அது அவருக்கு பெரிதாக பலனளிக்கவில்லை.

* 10,000 கி.மீ

1990 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாஜக தலைவர் எல் கே அத்வானியின் "ரத யாத்திரை", அக்டோபர் 30 ஆம் தேதி அயோத்தியை அடைய இருந்தது. ஆனால், அக்டோபர் 19 அன்று பீகாரில் அவர் கைது செய்யப்பட்டதுடன் அது முடிவுக்கு வந்தது.

* 4,000 கி.மீ

1983-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் சந்திரசேகர் கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை 4 மாதங்களில் 4,000-க்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொண்டார்.  அறிக்கையின்படி அவர் ஒரு நாளைக்கு 25 கி.மீ பயணம் செய்தார். இது ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை போன்றது.

அந்த நேரத்தில் இந்தியா டுடேயின் ஒரு அறிக்கையின்படி, '... 4,000 கி.மீ. தாண்டி, கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஜனதா கட்சித் தலைவர் சந்திர சேகர் கடந்த வாரம் புதுடெல்லியை அடைந்தபோது - அவரது கரடுமுரடான முகம், கொப்புளங்கள் நிறைந்த பாதங்கள் உடன் –அவருக்கு வரவேற்பு கோலாகலமாக இருந்தது.

* 40,000 கி.மீ

1982 ஆம் ஆண்டில், நடிகராக இருந்து, அரசியல்வாதியான, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் என்.டி.ராமராவ், கிட்டத்தட்ட 40,000 கி.மீ தூரம் ‘சைதன்ய ரதம்’ யாத்திரை சென்றார், ஒன்பது மாதங்களில் நான்கு முறை மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். தொடர்ந்து 1983ல் மாநிலத் தேர்தல்களில் அமோக வெற்றியைப் பெற்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment