Advertisment

ரூ. 2,700 முதல் 4 லட்சம் வரை: குடியரசுத் தலைவர்கள் பெற்ற 250 பரிசுகள் இன்று முதல் ஏலம்

ஆகஸ்ட் 5 முதல் 26 வரை இ-உபஹார் இணையதளத்தில் ராஷ்டிரபதி பவன் நடத்தும் ஏலத்தில், பொருட்களின் அடிப்படை விலை ரூ.2,700 முதல் ரூ.4 லட்சம் வரை இருக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
president gifts special auction

250 gifts to Presidents on auction from today

பல்வேறு இந்திய ஜனாதிபதிகள் பெற்ற நினைவுப் பரிசுகளின் ஒரு பகுதியாக புத்தகங்கள், நகைகள், மரச்சாமான்கள் மற்றும் சிற்பங்கள் என 250 பொருள்கள் இன்று முதல் ஏலத்துக்கு வரவுள்ளன.

Advertisment

ஆகஸ்ட் 5 முதல் 26 வரை இ-உபஹார் இணையதளத்தில் ராஷ்டிரபதி பவன் நடத்தும் ஏலத்தில், பொருட்களின் அடிப்படை விலை ரூ.2,700 முதல் ரூ.4 லட்சம் வரை இருக்கும். இதன் மூலம் கிடைக்கும் தொகையானது குழந்தைகளுக்கு உதவுவதற்காக வழங்கப்படும், என ராஷ்டிரபதி பவன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிப்ரவரியில் அந்தமான் நிக்கோபார் கமாண்டிடம் இருந்து ஜனாதிபதி திரௌபதி முர்மு பெற்ற நினைவுப் பரிசும் இதில் அடங்கும். கடற்படையால் பயன்படுத்தப்படும் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களின் ஆறு மாதிரிகள், ஒரு அக்ரிலிக் கண்ணாடி உறையில் மூடப்பட்டிருக்கும், இது கமாண்டின் கடல் இருப்பைக் குறிக்கிறது.

14 கிலோ எடையுள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ஷெல் கிராஃப்ட் ஓவியம், போர்ட் பிளேயரில் சுபாஷ் சந்திர போஸ் மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்த நினைவு தினத்தை நினைவுகூரும் வகையில், முர்முவுக்குக் கிடைத்தது, இதன் ஆரம்ப விலை ரூ.4.02 லட்சமாகும்.

வைஸ் அட்மிரல் ஆர்.பி. பண்டிட் முர்முவுக்கு வழங்கிய கர்நாடகாவின் ஹொய்சலேஷ்வரா கோயிலின் பிரதியும் உள்ளது, இதன் அடிப்படை விலை ரூ.1.5 லட்சம்.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா தேவிசிங் பாட்டீல் பெற்ற ரெளண்ட் மார்பிள் பிளேட் அடிப்படை விலை ரூ.6,000.

ஹரியானாவின் ஜெயின் சமூகத்தினரால், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வழங்கப்பட்ட சுமார் 1.5 கிலோ அரிசியை வைத்திருக்கும் திறன் கொண்ட ரைஸ் பாடி (உலோகப் பானை) 3,500 ரூபாய்க்கு ஏலத்தில் கிடைக்கிறது.

ஏலத்துக்கு விடப்படும் பரிசுகளில் மிகக் குறைந்த விலையில் வருவது, பிரணாப் முகர்ஜி பெற்ற கிரிஸ்டல் குளோப் இடம்பெறும் டிராஃபி. இதன் அடிப்படை விலை ரூ. 2,700 ஆகும்.

2005 ஆம் ஆண்டு சிறு, வேளாண் மற்றும் கிராமப்புற தொழில்களின் தேசிய மாநாட்டின் போது டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமுக்கு வழங்கப்பட்ட நூல் மற்றும் அட்டையால் செய்யப்பட்ட ஒரு ஜோடி மான், கிட்டத்தட்ட உலோகப் பானையின் அதே விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட பொருட்களில் ஒன்றாகும்.

அஸ்ஸாமில் இருந்து முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பெற்றுக் கொண்ட ஜாபி என்ற பாரம்பரிய பல வண்ணத் தொப்பி ரூ. 3,000 முதல் கிடைக்கிறது, அதே சமயம் மெட்டல் பேனா ஹோல்டர் ரூ.2,800 அடிப்படை விலையில் கிடைக்கிறது.

Read in English: Netaji painting to rice pot, 250 gifts to Presidents on auction from today

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment