Indian Prime Minister Narendra Modi helps 90 others country to fight against coronavirus : கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மாபெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியா பல்வேறு நாடுகளுக்கு மருத்துவ ரீதியாகவும் தூதரக ரீதியாகவும் உதவி செய்து வருகிறது.
இந்தியர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் வகை மருந்துகள் பெரிய அளவில் கொரோனா கட்டுப்பாட்டிற்கு உதவி வருகிறது என்று அறிந்த பல வெளிநாட்டு தலைவர்கள், இந்த மருந்துக்கான தடையை நீக்க வேண்டும் என்று கூறினார்கள். உடனே அந்த மருந்தின் ஏற்றுமதிக்கான தடையை நீக்கி பல்வேறு நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளும், பாராசிட்டமால் மாத்திரைகளும் ஏற்றுமதி செய்யப்பட்டது.
மேலும் படிக்க : ஆகாயத்தில் பறக்கும் ரயில் கட்டணம்: கொரோனா காலத்தில் இப்படியா கசக்கிப் பிழிவீங்க..!
இந்நிலையில் உலகில் இருக்கும் நாடுகளில், எந்த நாடுகள் எல்லாம் இந்தியாவின் உதவியை நாடுகிறதோ அவர்கள் அனைவருக்கும் உதவி செய்யுங்கள் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கேசரி என்ற கப்பல் மூலமாக உலக நாடுகளுக்கு தேவையான மருந்துப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் முகக் கவசங்கள், கையுறைகள், கவச உடைகள், மருந்துப் பொருட்கள், பரிசோதனை கருவிகள் மற்றும் தூதரக உதவிகளை 90 நாடுகளுக்கு இந்தியா செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.100 கோடி முதல் ரூ.120 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. சவுதி அரேபியா, எமிரேட்ஸ், குவைத் மற்றும் ஜோர்டான் உள்ளிட்ட மேற்கு ஆசிய நாடுகளுக்கு தேவையான மருந்துகள் தொடர்ந்து அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தையும் வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ்வர்தன் சிரிங்லா மேற்கொள்ள உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“