பாகிஸ்தானில் இந்திய மரண தண்டனைக் கைதியான சரப்ஜித் சிங் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும், லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் சயீதின் நெருங்கிய கூட்டாளியுமான அமீர் சர்பராஸ் தம்பா, லாகூரில் ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள இஸ்லாம்புரா பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் தம்பாவை துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் பலத்த காயம் அடைந்த தம்பா, ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
49 வயதான சிங், உயர் பாதுகாப்பு கோட் லக்பத் சிறைக்குள் தம்பா உள்ளிட்ட கைதிகளால் கொடூரமாக தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட ஒரு வார காலம் கோமா நிலையில் இருந்தார்.
பின்னர், மே 2, 2013 அதிகாலை லாகூரில் உள்ள ஜின்னா மருத்துவமனையில் மாரடைப்பால் இறந்தார். தம்பா, அவரது தந்தையின் பெயர் சர்ஃபராஸ் ஜாவேத், லாகூரில் 1979 இல் பிறந்தார் மற்றும் லஷ்கர் இடி நிறுவனரின் நெருங்கிய கூட்டாளி ஆவார்.
பாகிஸ்தான் கைதிகள் குழு ஒன்று செங்கற்கள் மற்றும் இரும்பு கம்பிகளால் சிங் மீது தாக்குதல் நடத்தியது. 1990 இல் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நடந்த பல குண்டுவெடிப்புகளில் பங்கேற்றதாக குற்றம் சாட்டப்பட்டு சிங் மீது மரண தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலத்தில் வாசிக்க : Indian prisoner Sarabjit Singh’s killer shot dead by gunmen in Pakistan
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“