தீபாவளி பண்டிகை : பயணிகளுக்கு சிறப்பு சலுகை… 47 ரயில்கள் சிறப்பு கட்டணம் ரத்து

IRCTC : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 47 ரயில்கள் சிறப்பு கட்டணம் ரத்து செய்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 101 ரயில்களில் சிறப்பு கட்டணத்தை குறைத்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 9–ந் தேதி, முக்கியமான ரயில்களில் ‘பிளெக்ஸி பேர்’ என்ற பெயரில் சிறப்பு கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டது. 44…

By: Updated: November 1, 2018, 10:31:55 AM

IRCTC : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 47 ரயில்கள் சிறப்பு கட்டணம் ரத்து செய்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 101 ரயில்களில் சிறப்பு கட்டணத்தை குறைத்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 9–ந் தேதி, முக்கியமான ரயில்களில் ‘பிளெக்ஸி பேர்’ என்ற பெயரில் சிறப்பு கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டது. 44 ராஜ்தானி ரயில்களிலும், 52 துரந்தோ ரயில்களிலும், 46 சதாப்தி ரெயில்களிலும் இந்த திட்டம் அமலுக்கு வந்தது.

இதன்படி, இந்த ரயில்களில் ஒவ்வொரு 10 சதவீத படுக்கைகள் நிரம்பியவுடன், அடிப்படை கட்டணம் 10 சதவீதம் உயரும். இதுபோன்று, 50 சதவீதம் வரை கட்டணம் உயரும். ஆனால், முதல் வகுப்பு ஏ.சி. பெட்டிகள் மற்றும் பொருளாதார வகுப்பு பெட்டிகளில் கட்டணம் மாற்றப்படவில்லை.

IRCTC : தீபாவளி ரயில் டிக்கெட்

இந்நிலையில், பயணிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், 15 பிரீமியம் ரயில்களில் சிறப்பு கட்டணத்தை ரயில்வே நிர்வாகம் முழுமையாக ரத்து செய்துள்ளது. 32 ரயில்களில் பண்டிகை அல்லாத சாதாரண காலங்களில் சிறப்பு கட்டணம் கிடையாது என்று அறிவித்துள்ளது. மேலும், 101 ரயில்களில் சிறப்பு கட்டணம், அடிப்படை கட்டணத்தில் 1.5 மடங்கு என்பதில் இருந்து 1.4 மடங்காக குறைக்கப்பட்டு உள்ளது.

இந்த தகவலை ரயில்வே மந்திரி பியுஷ் கோயல், தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ‘‘படுக்கைகள் 50 சதவீதத்துக்கு குறைவாக நிரம்பும் 15 ரயில்களில் சிறப்பு கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், பயணிகள் குறைந்த கட்டணத்தில் டிக்கெட் பெறலாம். படுக்கைகள் முழுமையாக நிரம்பும் என்பதால் ரயில்வேயும் பலன் அடையும். எனவே, இருதரப்புக்கும் பலன் கிடைக்கும். பயணிகளுக்கு பண்டிகை கால பரிசாக இதை அறிவித்துள்ளோம்’’ என்றார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Indian railway department announces cancellation on special payment for 47 trains

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X