இவர்கள் சிங்கப் பெண்களா? அல்லது இந்நிலைமைக்கு நாம் வருந்த வேண்டுமா?

ஏழைப் பெண்களின் உழைப்பை சுரண்டுவதை பெருமையாக போஸ்ட் செய்வதா? இந்திய ரயில்வேக்கு எம்.பி. சசிதரூர் கேள்வி!

ஏழைப் பெண்களின் உழைப்பை சுரண்டுவதை பெருமையாக போஸ்ட் செய்வதா? இந்திய ரயில்வேக்கு எம்.பி. சசிதரூர் கேள்வி!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Indian Railway posted women porters

Indian Railway posted women porters

Indian Railway posted women porters in twitter : உலகில் பெண்களால் முடியாத காரியம் என்று ஒன்று இல்லவே இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.  இந்திய ரயில்வேயில் பணியாற்றும் பெண் சுமை தூக்கிகள் பலரின் புகைப்படங்களை தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அவர்களின் உழைப்பிற்கு பெருமை சேர்க்கும் வகையில் கண்டெண்ட்டுகளையும் கொடுத்திருந்தது.

Advertisment

ஆனால் அளவுக்கு அதிகமான சுமைகளை தூக்கும் மக்களை பார்க்கும் போது அவர்களின் பலத்தினை நாம் போற்றுகின்ற அதே நேரத்தில், இவ்வளவு உழைப்பின் பலனாய் இவர்கள் பெறுவது என்ன? இது போன்ற செயல்களுக்கு முடிவுகள் கொண்டு வந்து கொஞ்சம் சிறப்பான வேலைகளை அவர்களுக்கு தரலாமே, அல்லது சிறப்பான முறையில் இந்த பளு தூக்கும் வேலைகளை மாற்றலாமே என்று பலரும் தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

Advertisment
Advertisements

சசி தரூர் கருத்து

ஏழைப் பெண்களின் உழைப்பை இப்படி சுமை தூக்க வைத்து சுரண்டுவதை பெருமையாக பதிவு செய்வதா என்று எம்.பி. சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார். இது போன்ற பழக்கங்களை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அனைத்து ரயில் நிலையங்களிலும் ட்ராலிகளும் ரேம்ப்களும் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

 

முதலில் போர்ட்டர்கள் குறித்து பதிவு செய்த இந்திய ரயில்வே பிறகு அந்த துறையின் வெவ்வேறு பிரிவுகளில் பணியாற்றும் பெண்களின் புகைப்படங்களை பதிவு செய்திருந்தது.

Irctc

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: