indian railways booking : ரயிலில் சொந்த ஊர்களுக்கு, குடும்பத்துடன் வெளியூர் செல்வது தொழில் சமந்தமாக அடிக்கடி பயணம் மேற்கொள்வது என்பது இந்தியாவில் சகஜம். அதிலும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியர்கள் தான் அதிகமாக ரயில்களை பயன்படுத்துகின்றனர்.
அதிலும் இரவு நேர பயணம் என்பது எல்லா பயணிகளும் அதிகம் விரும்பும் ஒன்று. காரணம் இரவில் தூங்கி கொண்டே சென்றால் பயண தூரம் அதிகமாக தெரியாது. அசதி இல்லாமல் சென்றடையலாம் என்பது தான். இதில் பயணிகள் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டியது இதுதான். நீங்கள் டிக்கெட்டை ரிசர்வ் செய்து இருந்தாலும் சரியாக இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே தூங்க முடியும். இது இந்தியன் ரயில்வே நிர்வாகத்தால் பின்தொடரப்படும் முக்கியமான விதிமுறையில் ஒன்று.
2017 ஆம் ஆண்டு முன்பு வரை ரயிலில் பயணிகள் தூங்கும் நேரம் இரவு 10 மணியில் இருந்து காலை 7 மணிவரை இருந்தது. ஆனால் இதுபற்றி பயணிகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. இந்நிலையில் பகலில் இருக்கையில் சிலர் தூங்குவதாக அடிக்கடி புகார்கள் வருவதையடுத்து ரயிலில் தூங்கும் நேரம் குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டது.
அதில் தான் இந்த புதிய விதிமுறை நடைமுறைக்கு வந்தது. இதில் உடல் நிலை சரியில்லாதவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோருக்கு இந்த கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் காலை 6 மணிக்கு மேல் பயணிகள் யாரெனும் தூங்கிக் கொண்டு வந்தால் இதுக் குறித்து ரயில்வே நிர்வாகத்திடம் உடனே புகார் அளிக்கலாம். அல்லது ரயில்வே பாதுகாப்பு காவலர்கள் இடமும் முறையிடலாம்.
6 மணிக்கு மேல் எழுந்து, நின்றுக் கொண்டு வரும் மற்ற பயணிகளுக்கு இடம் அளிக்க வேண்டும் என்பதையும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.