Indian Railways: இந்தியன் ரயில்வேத் துறை பெரும்பாலான விரைவு ரயில்களில் பல மாற்றங்களை செய்து வருகிறது. உணவு செயலி, டிக்கெட் புக்கிங் செயலி மற்றும் உணவு தரத்தில் மேம்பாடு என பலவற்றையும் இந்தியன் ரயில்வேத்துறை மேம்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது விரைவு ரயில்களின் நிறத்தை மாற்றும் பணியில் இத்துறை இறங்கியுள்ளது.
இந்தியன் ரயில்வேத்துறையில் இயங்கும் ஒரு சில முக்கிய விரைவு ரயில்களை தவிற மற்ற ரயில்களின் நீல நிறத்தை மாற்றி பிரவுன் நிறம் அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சென்னையில் தயாராகும் ரயில்களின் கோச்சுகளில் மட்டும் பிரவுன் நிறம் அடிக்கப்படுகிறது. சுமார் 30 ஆயிரம் கோச்சுகள் புதிய நிறம் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
புதிய பிரவுன் நிறத்துடன் தயாராக இருக்கும் முதல் ரயில் டெல்லி - பத்தான்கோட் எக்ஸ்பிரஸ். இந்த ஜூன் மாதத்தின் முடிவில் இந்த விரைவு ரயில் புதிய நிறத் திட்டத்துடன் பொதுமக்கள் சேவைக்காக இயக்கப்பட உள்ளது.
இருப்பினும், இந்த புதிய நிறத்தின் திட்டம், ராஜ்தானி, ஷதாப்தி, டுரண்டோ, தேஜாஸ் மற்றும் காதிமான் போன்ற சில முக்கிய விரைவு ரயில்களில் நிறைவேற்றப்படாது என ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்தியன் ரயில்வேத்துறை, விரைவு ரயில்களின் வெளித் தோற்றம் மட்டுமின்றி உள்ளேயும் சில மாற்றங்களைச் செய்ய முடிவெடுத்துள்ளனர்.