50% குறைவான பயணிகளை கொண்டிருக்கும் ரயில்கள் இனி இயங்காது... செலவுகளை குறைக்க புது யோசனை!

ஆகஸ்ட் மாத கடைசி வரைக்கும் 68 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இது திட்டமிட்ட வரையறையை விட 1,800 கோடி அதிகமாகும்.

Avishek G Dastidar

Indian Railways facing shortfall of Rs 30,000 crore : ஒவ்வொரு வருட முடிவிலும் இந்திய ரயில்வே துறையின் அனைத்து வித தேவைகளையும் பூர்த்தி செய்ய தோராயமாக 30 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த துறையில் அடையும் ஆதாயம் மிகவும் குறைவாக இருப்பதாகவும், அதே நேரத்தில் இந்த துறைக்காக செய்யப்படும் செலவுகள் மிக அதிகமாக இருக்கின்ற காரணத்தாலும் செலவுகளை கட்டுப்படுத்த பல முக்கிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வந்துள்ளது. ரயில்களை சுத்தம் செய்வதற்கு, ரயில் நிலையங்களை பராமரிப்பதற்கு ஸ்பான்சர்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. மேலும் 50% குறைவாகவே பயணிகளை கொண்டு பயணிக்கும் ரயில் சேவைகளை நிறுத்தவும் திட்டமிட்டுள்ளது மத்திய அரசு.

“செலவீனங்களை குறைக்கவும், வருமானத்தை அதிககரிக்கவும், ரயில்வே வாரியம் சில முக்கியமான, உடனடியான முடிவுகளை மேற்கொண்டுள்ளது” என செப்டம்பர் 6ம் தேதி 17 ரயில்வே மண்டலங்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது மத்திய அரசு. ஆகஸ்ட் மாத முடிவின் போது ரயில்வே துறை 3.4% லாபத்தை அடைந்துள்ளது. இருப்பினும் 9% செலவுகளும் அதிகரித்துள்ளது. ஜூலை வரையில் வருமானமும், செலவும் சரியாகவே இருந்தது. ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் வருமானம் மிகவும் குறைந்துள்ளது. எதிர்பாராத வகையில் ஏற்பட்ட வெள்ளம் போன்ற காரணங்களால் இந்த வருமான குறைவு ஏற்பட்டுள்ளது. எது எப்படியாகினும் இந்நிலையை சரி செய்வோம் என இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு ரயில்வே வாரிய சேர்மென் வி.கே. யாதவ் கூறியுள்ளார்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

செலவுகளை சரி செய்ய ரயில்வே துறை எடுத்திருக்கும் முடிவுகள் என்ன?

ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களை சுத்தம் செய்ய சி.எஸ்.ஆர் மற்றும் இதர ஸ்பான்ஸர்கள் பெறப்படும்.  50%க்கும் குறைவான பயணிகளைக் கொண்டிருக்கும் ரயில்களின் பயன்பாடு குறைக்கப்படும்.  30 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருக்கும் டீசல் எஞ்சின்களை மாற்றிவிட்டு புது எஞ்சின்கள் பொருத்தப்படும். இதன் மூலம் எரிபொருள் செலவு மிச்சப்படுத்தப்படும்.  சிறந்த மெய்ண்டெனன்ஸ் திட்டங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.  மேலும் ரயில்வே பணியாளர்கள் குடியிருப்பு கட்டிடங்களில் ஏற்படும் பழுதுகளை சரி செய்ய, ரயில்வே நிலங்களில் இருந்து வரும் வருமானம் பயன்படுத்தப்படும் என்பது போன்ற திட்டங்கள் 17 மண்டலங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்த நடவடிக்கைகள் மூலம் தோராயமாக வருடத்திற்கு ரூ. 5 ஆயிரம் கோடி வரை சேமிக்க இயலும் என்று யாதவ் கூறுகிறார். பட்ஜெட் முடிந்தபின்பு எடுக்கப்படும் சீரான மேற்பார்வை நடவடிக்கைகள் மூலமாக மேலும் ரூ. 5 ஆயிரம் கோடியை மிச்சம் செய்யலாம். 1 லட்சத்தி 55 ஆயிரம் கோடி ரூபாய் ரயில்வே துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் எரிபொருள் செலவு மட்டும் 3 ஆயிரத்து ஐநூறு கோடியாகும். அதே போன்று பணியாளர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம், காண்ராக்ட் மற்றும் ப்ர்கொயர்மெண்ட் போன்றவற்றிற்கு அளிக்கப்படும் தொகை ஆயிரம் கோடி ஆகும். மேலும் இந்த நிதி ஆண்டில் இதர தேவைகளை பூர்த்தி செய்ய 17 ஆயிரம் கோடி இருப்பில் இருக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ரயில்வே துறையில் வேலை வாய்ப்புகள் என்பது 90% பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் குறிப்பிடுகிறார். ஆனால் இந்த கடிதத்தில் 95% வரையில் பணியிடங்கள் பூர்த்தி செய்யபட்டுள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் தற்போதைய கரெண்ட் ஆப்ரேட்டிங் ரேசியோ 100%-ஐ கடந்துவிட்டதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாத காலங்களில் ரயில்வே துறையில் வருமானம் குறைவாகவும், செலவு மிக அதிகமாகவும் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தின் நிலை குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.

பயணிகளிடம் இருந்து பெற இருக்கும்  வருமானமாக பட்ஜெட்டில் ஒரு நிதி அறிவிக்கப்பட்டது. ஆனால் 11 ஆயிரத்து 852 கோடி ரூபாய் வரையில் நிதிக்குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 1.3% சரிவை சந்தித்துள்ளது இப்பகுதி.  இந்த ஆண்டு ரயில்வேக்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட் 1,55,000 கோடி ஒதுக்கப்பட்டது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 10% அதிகமாகும். ஆகஸ்ட் மாத கடைசி வரைக்கும் 68 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இது திட்டமிட்ட வரையறையை விட 1,800 கோடி அதிகமாகும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close