பல மாதங்களுக்கு முன்பு ரயில் டிக்கெட் ரிசர்வ் செய்தால் 50% தள்ளுபடி: ரயில்வேக்கு பரிந்துரை

ரயில் டிக்கெட்டுகளை பல மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்தால், டிக்கெட்டின் விலையில் 50% வரை தள்ளுபடி அளிக்கலாம் என குழு பரிந்துரை செய்துள்ளது.

ரயில் டிக்கெட்டுகளை பல மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்தால், டிக்கெட்டின் விலையில் 50 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கலாம் என, ரயில்வே வாரியம் அமைத்த குழு பரிந்துரை செய்துள்ளது.

ரயில் டிக்கெட்டுகளின் விலையை மறுஆய்வு செய்ய ரயில்வே வாரியம் மறுஆய்வு குழுவை அமைத்தது. இந்த குழுவில், நிதி ஆயோக் ஆலோசகர் ரவீந்தர் கோயல் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர். அந்த குழு, விமான நிறுவனங்கள், ஓட்டல்கள் போன்று கட்டண முறையை பின்பற்ற ரயில்வே வாரியத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. அந்த குழுவின் முக்கியமான பரிந்துரைகள் சில:

– டிக்கெட்டுகளை பல மாதங்களுக்கு முன்பே டிக்கெட் விலையில் விமான நிறுவனங்கள் தள்ளுபடி அளிக்கின்றன. அதுபோல், ரயில் டிக்கெட்டுகளை பல மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்தால், டிக்கெட்டின் விலையில் 50 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கலாம்.

– முன்பதிவின்போது எவ்வளவு இருக்கைகள் காலியாக உள்ளன என்பதை பொறுத்து 20 முதல் 50% வரை தள்ளுபடி அளிக்கலாம்.

– பயணிகள் இறுதி பட்டியல் தயாரான பின்பு கூட தள்ளுபடி அளிக்கலாம். ரயில் புறப்படுவதற்கு இரண்டு நாள் முன்பு முதல் 2 மனிநேரம் முன்பு வரை தள்ளுபடி அளிக்கலாம்.

– ரயில்களில் கீழ் படுக்கைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம்.

– வசதியான நேரத்தில் (காலை) போய்ச்சேரும் ரயில்களுக்கு கட்டணத்தை உயர்த்தலாம். அதுபோல, நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை, பகல் 1 மணி முதல் 5 மணி வரை போய் சேரும் ரயில்களுக்கு கட்டணத்தை குறைக்கலாம்.

– பண்டிகை காலங்களில் டிக்கெட் விலையை உயர்த்தலாம். மற்ற நேரங்களில் குறைக்கலாம்.

– சமையலறை பெட்டி இணைக்கப்பட்ட ரயில்களில் பிரீமியம் கட்டணம் வசூலிக்கலாம்.

– கட்டணத்தை மாற்றி அமைப்பதை ரயில்வே கோட்டங்களிடம் விட்டுவிடகாம். உள்ளூர் தேவை, காலியிட அடிப்படையில் அவர்கள் சரியாக முடிவு எடுப்பர்.

இந்த பரிந்துரைகளை அப்படியே ஏற்காமல் ரயில்வே வாரியல் சில மாற்றங்களை செய்யும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close