ரயில்வே ஒப்பந்த ஊழியர்களுக்காக புதிய திட்டம் அறிமுகம்!

ஊழியர்களுக்கு அடையாள அட்டையும் விரைவில் வழங்கப்படவுள்ளது.

முதன்முறையாக ரயில்வே ஒப்பந்த ஊழியர்களுக்கு அனைத்து சலுகைகளும் கிடைக்கும் வகையில் ரயில்வே துறை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.

ரயில்வே துறையில் ஒப்பந்த பிரிவில் பணியாற்றும் ஊழியர்களுகளின் உரிமைகள் மீறப்படுவதாகவும், கடின உழைப்பை மேற்கொள்ளும் தங்களுக்கு தக்க பலன்கள் கிடைக்காமல் கைநழுவி போவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றனர். இந்நிலையில், ஒப்பந்த பிரிவில் பணிப்புரியும் ரயில்வே ஊழியர்களுக்கு தனியாக தகவல் தளத்தையும், அமைப்புசார்ந்த துறையில் பணியாற்றும் ஊழியர்களை போலவே பலன் கிடைக்கும் வகையில், ரயில்வே துறை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.

இதன்படி, ரயில்வேயில் சுத்திகரிப்பு பணிகள், பராமரிப்பு பணிகள், துப்புறவு பணிகள் ஆகியவற்றை மேற்கொள்ளும் தொழிலாளர்களின் முழு விபரங்கள் டிஜிட்டல் முறையில் இணைக்கப்படவுள்ளன. இதன்மூலம் ஊழியர்களின் உரிமை மீறப்படாமல், முழுமையான பலன்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பணிகளில் ஒப்பந்ததாரக்களின் கீழ் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கு இந்த புதிய திட்டம் பயன்படும். அத்துடன், ஒப்பந்ததாரர்களுக்கும், ரயில்வே துறைக்கும் இடையில் உள்ள விதிமுறைகளிலும் புதிய கட்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஊழியர்களின் முழு விபரங்கள், போலீஸ் விசாரணை தகவல், மருத்துவக் காப்பீடு, அரசின் அடையாளச் சான்றிதழ், வீட்டு முகவரி, வருகைப்பதிவு, பணி செய்யும் நேரம், விடுமுறை, ஊதிய விவரங்கள், ஒப்பந்தகாரின் பெயர் என அனைத்து விபரங்கள் பெறப்படும் கணியில் டிஜிட்டல் வடிவில் பராமரிக்கப்படும். அத்துடன் ஊழியர்களுக்கு அடையாள அட்டையும் விரைவில் வழங்கப்படவுள்ளது.

இந்த புதிய திட்டத்தால், ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்த, முழு விபரங்கள் அவர்களுக்கு நேரடியாகவே தெரிய வரும் என்றும், அவர்களின் உரிமைகள் காக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். இந்த புதிய விதிமுறையின் கீழ் வேலை செய்யாத ஒப்பந்ததாரர்கள் ரயில்வே பணியில் இருந்து உடனடியாக நீக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

×Close
×Close