சிறப்பு ரயில்கள் மூலம் எந்த ஊர்களுக்கு பயணிக்கலாம்? விவரப் பட்டியல் இங்கே
IRC TC special train bookings: புது டெல்லியில் இருந்து சென்னைக்கு வரும் 13ம் தேதி (புதன்கிழமை) சிறப்பு ரயில் ஒன்று இயக்கப்படுகிறது. 15ம் தேதி(வெள்ளிக்கிழமை) அதே ரயில் மீண்டும் டெல்லிக்குப் புறப்படுகிறது.
IRC TC special train bookings: புது டெல்லியில் இருந்து சென்னைக்கு வரும் 13ம் தேதி (புதன்கிழமை) சிறப்பு ரயில் ஒன்று இயக்கப்படுகிறது. 15ம் தேதி(வெள்ளிக்கிழமை) அதே ரயில் மீண்டும் டெல்லிக்குப் புறப்படுகிறது.
IRCTC special train list: முதற்கட்டமாக நாளை முதல் பயணிகள் ரயில் சேவையை படிப்படியாக தொடங்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. புது தில்லி நிலையத்திலிருந்து திப்ருகார், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, புவனேஸ்வர், செகந்திராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், மட்கான், மும்பை சென்ட்ரல், அகமதாபாத் மற்றும் ஜம்மு தாவி ஆகியவற்றை இணைக்கும் சிறப்பு ரயில்களாக இயக்கப்படுகிறது.
Advertisment
அதன்பிறகு, கோவிட்-19 நோயாளிகள் பராமரிப்பு மையங்களுக்கு 20,000 ரயில்பெட்டிகளை ஒதுக்கிய பின்னர், கிடைக்கக்கூடிய ரயில்பெட்டிகளின் அடிப்படையில் புதிய வழித்தடங்களில் மேலும் சிறப்பு சேவைகளுடன் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், புனித யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் பல்வேறு இடங்களில் தவித்து வந்த இதர நபர்களை சிறப்பு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கவேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, இந்திய ரயில்வே ‘’ஷ்ரமிக் சிறப்பு ‘’ ரயில்களை இயக்கி வருகிறது. எனவே, தினசரி 300 ஷ்ராமிக் ஸ்பெஷல் ரெயில்களுக்கான ரயில்பெட்டிகளை பூர்த்தி செய்யப்படும் அடிப்படையில் பயணிகள் ரயில் சேவை விரிவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டிருக்கும் சிறப்பு ரயில்கள்:
Advertisment
Advertisements
சென்னைக்கான சிறப்பு ரயில்கள்:
புது டெல்லியில் இருந்து சென்னைக்கு வரும் 13ம் தேதி (புதன்கிழமை) சிறப்பு ரயில் ஒன்று இயக்கப்படுகிறது. 15ம் தேதி(வெள்ளிக்கிழமை) அதே ரயில் மீண்டும் டெல்லிக்குப் புறப்படுகிறது.
பயணம் செய்வதற்கான முன்பதிவு டிக்கெட் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் என்றும், ஐஆர்சிடிசி இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்யப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ள்ளது. மேலும், ரயில் நிலையங்களில் டிக்கெட் முன்பதிவு கவுண்டர்கள் மூடப்பட்டிருக்கும், கவுண்ட்டர்களில் டிக்கெட்டுகள், பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் உட்பட வழங்கப்படாது என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil