ரயில் பயணிகளையும் விட்டுவைக்கவில்லை கொரோனா பீதி : ஏசி ரயிலில் இனி போர்வை நோ...

Indian railways : குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு போர்வைகள் தேவைப்படாது அளவில் பெட்டிகளில் உள்ள குளிரூட்டப்பட்ட வெப்ப நிலையை பொருத்தமாக வைக்க இந்திய ரயில்வே...

COVID-19 பரவாமல் இருக்க இந்திய ரயில்வே ஒரு மிகப்பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது. நோவல் கொரோனா பரவுவதை தடுப்பதற்காக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் நடைபெற்ற ரயில்வே அமைச்சரவைக் கூட்டத்தில் அனைத்து ரயில்களிலும் உள்ள குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் போர்வை மற்றும் திரைசீலைகள் வழங்கும் நடைமுறையை திரும்ப பெறுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வை மற்றும் திரைசீலைகள் ஒவ்வொரு பயணத்துக்கு பிறகும் துவைக்கப்படாததால், அடுத்த உத்தரவு வரும் வரை அவை சேவையிலிருந்து உடனடியாக திரும்ப பெறப்படுவதாக ரயில்வே அமைச்சரகம் தெரிவித்துள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு போர்வைகள் தேவைப்படாது அளவில் பெட்டிகளில் உள்ள குளிரூட்டப்பட்ட வெப்ப நிலையை பொருத்தமாக வைக்க இந்திய ரயில்வே பரிசீலித்து வருகிறது. இருப்பினும் பயணிகளுக்கு தேவை ஏற்பட்டால் போர்வை வழங்கவும் ஏற்பாடுகளை இந்திய ரயில்வே செய்துள்ளது.

ரயில்வே வாரியம் கீழ்கண்ட வழிமுறைகளை இந்திய ரயில்வேயில் உள்ள அனைத்து மண்டலங்களுக்கும் வழங்கியுள்ளது.
இந்திய ரயில்வே குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் உள்ள அனைத்து திரைசீலைகளையும் அகற்றப் போகிறது
.
அடுத்த உத்தரவு வரும் வரை போர்வைகள் வழங்குவது திரும்ப பெறப்படுகிறது.

பெட்டிகளின் உள்ளே குளிரூட்டப்பட்ட வெப்ப நிலை 24 முதல் 25 °C அளவில் வைக்கப்படும்.

சில கூடுதல் துவைக்கப்பட்ட பேர்வைகள் அவசர தேவைகளுக்காக வைக்கப்படும்.

முதல் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டியில் பயணிகளின் தேவைகளுக்கு ஏற்ப புதிதாக துவைத்த போர்வைகள் வழங்கப்பட வேண்டும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பயணிகளை முன்கூட்டியே தயார்படுத்த தேவையான விளம்பரங்கள் வழங்கப்பட வேண்டும்.

அனைத்து உதிரி போர்வைகள் மற்றும் திரைசீலைகளையும் துவைத்து, உலர்த்தி, சுத்தமான உலர்ந்த இடங்களில் சேமித்து வைக்க வேண்டும்.

ஏற்கனவே உள்ள அறிவுறுத்தல்களின்படி 100 சதவிகிதம் புதிய துவைத்த linen களை பயணிகளுக்கு சீல் வைக்கப்பட்ட பாக்கெட்களில் கொடுக்கவேண்டும்.

குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு இது தொடர்பான ஒரு சுருக்கமாக செய்தியை IVRS அல்லது SMS மூலமாக கொடுக்க வேண்டும்.

குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் தங்களுக்கு தேவையான போர்வைகளை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பயணத்துக்கு கொண்டு வர அறிவுறுத்தப்படுகிறார்கள். ரயில் பெட்டிகள் மற்றும் கழிப்பறைகளை அடிக்கடி கிருமிநாசினிகளைக் கொண்டு சுத்தம் செய்ய தேசிய போக்குவரத்தான ரயில்வே வலியுறுத்துகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close