Indian Railways reservation charts available on IRCTC website : ரயில் பயணிகள் பட்டியலை கூட இனி சிரமம் இல்லாமல் ஆன்லைனிலேயே பார்க்கும் வசதியை ஐஆர்சிடிசி கொண்டுவந்துள்ளது.
இந்திய அரசின் கீழ் செயல்படும் வெவ்வேறு துறைகளில் ஒரு முக்கியமான துறை தான் இந்தியன் ரயில்வே துறை. இந்த துறையின் கீழ் ரயில் பயணங்கள் மேற்கொள்ளும் பயணிகளுக்காக பல சலுகைகள் மற்றும் வசதிகள் அமைக்கப்பட்டு வருகிறது.
Indian Railways reservation charts on IRCTC : ரயில் பயணிகள் பட்டியல்
தட்கல் டிக்கெட் வசதி முதல் ரயில் நிலையங்களுக்கு அருகே அமைக்க இருக்கும் நவீன ஹோட்டல் வரை பல வசதிகள் பயணிகளுக்காக அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது ரயில் பயணிகள் பெயர் பட்டியலை அறிவதற்கும் புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு ரயில் பயணத்திற்கு முன்னதாக பெயர் பட்டியல் ஒட்டப்படும். அந்த பட்டியலில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் பெற்றவர்களின் பெயரும் வயது மற்றும் விவரங்களும் இடம்பெற்றிருக்கும். ஆனால் சில காரணங்களுக்காக அந்த திட்டத்தை மாற்றி டிடிஇ மூலம் தான் விவரங்களை அறிந்துக் கொள்ள முடியும் என்று அறிவித்தது.
ஆனால் தற்போது பயணிகளின் விவரப் பட்டியலை, ஆன்லைனிலேயே காணும் வசதி செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
ஐஆர்சிடிசி இணையத்தளத்தில், ‘சார்ட் மற்றும் வேகன்ஸி’ என்ற பதிவு இருக்கும். அந்த பதிவில், ரயில் எண், பயணம் தேதி, ரயில் நிலையம் ஆகிய விவரங்களை பதிவிட்டு, உங்கள் பர்த் விவரங்களை காணலாம்.