பண்டிகை கால ஆஃபர்: ரயில்வே ரவுண்ட் டிரிப் திட்டம் - ஒரே ரயில் டிக்கெட்டில் 20% தள்ளுபடி பெறுவது எப்படி?

இந்திய ரயில்வேயின் புதிய 'ரவுண்ட் டிரிப்' திட்டம், பண்டிகைக் காலத்தில் பயணிகளுக்குப் பெரும் உதவியாக இருக்கும். இந்தத் திட்டத்தின்படி, பயணிகள் திரும்பி வரும் பயணச்சீட்டுக்கு (Return Journey Ticket) அடிப்படை கட்டணத்தில் 20% தள்ளுபடி பெற முடியும்.

இந்திய ரயில்வேயின் புதிய 'ரவுண்ட் டிரிப்' திட்டம், பண்டிகைக் காலத்தில் பயணிகளுக்குப் பெரும் உதவியாக இருக்கும். இந்தத் திட்டத்தின்படி, பயணிகள் திரும்பி வரும் பயணச்சீட்டுக்கு (Return Journey Ticket) அடிப்படை கட்டணத்தில் 20% தள்ளுபடி பெற முடியும்.

author-image
WebDesk
New Update
Indian Railways Round Trip

பண்டிகைக் காலப் பயணம்: ரவுண்ட் டிரிப் திட்டம் - ஒரே டிக்கெட்டில் 20% தள்ளுபடி பெறுவது எப்படி?

பண்டிகை காலங்களில் பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், பயணச்சீட்டு முன்பதிவை எளிதாக்கவும் இந்திய ரயில்வே புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 'ரவுண்ட் டிரிப்' (Round Trip) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம், ஒரே நேரத்தில் போகும் மற்றும் திரும்பி வரும் பயணச்சீட்டுகளைப் பதிவு செய்ய உதவுகிறது. இந்தத் திட்டம் பயணிகளுக்குச் சிறப்பான தள்ளுபடியையும் வழங்குகிறது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Advertisment

இந்தத் திட்டத்தின் கீழ், பண்டிகைக் காலப் பயணங்களுக்காக, ஒருவழி பயணச்சீட்டை முன்பதிவு செய்த பின்னர், திரும்பி வரும் டிக்கெட் அடிப்படை கட்டணத்தில் 20% தள்ளுபடி கிடைக்கும். இந்தச் சலுகை, நவ.17 முதல் டிசம்பர் 1, 2025 வரை திரும்பி வரும் பயணங்களுக்குப் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. போகும் பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு:

பயண தேதி: அக்.13 முதல் அக்.26-ம் தேதி வரை

முன்பதிவு முறை: ரயில்வே இணையதளத்தில், 'Trains' மெனுவில் உள்ள 'Festival Round Trip Scheme' என்ற துணை மெனுவைப் பயன்படுத்தலாம். அல்லது வழக்கமான முன்பதிவு முறையிலும் பயணச் சீட்டைப் பதிவு செய்யலாம். 'Festival Round Trip Scheme' என்பதைத் தேர்ந்தெடுத்த பிறகு, தோன்றும் விதிமுறைகளைப் படித்துவிட்டு, 'OK' பட்டனை அழுத்த வேண்டும். பின்னர், வழக்கம்போல் புறப்படும் மற்றும் சேரும் இடம், பயண தேதி, வகுப்பு போன்ற விவரங்களை பூர்த்தி செய்து முன்பதிவை நிறைவு செய்ய வேண்டும். முன்பதிவு முடிந்ததும், உறுதிப்படுத்தும் பக்கத்தில் 'Book Return Ticket (20% Discount)' என்ற பொத்தான் தோன்றும். இந்த பொத்தான், உங்கள் பயணச்சீட்டு ஹிஸ்டிரியிலும் கிடைக்கும்.

2. திரும்பி வரும் பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு:

பயண தேதி: நவ.17 முதல் டிச.1-ம் தேதி வரை

முன்பதிவு முறை: திரும்பி வரும் பயணச்சீட்டை, நீங்கள் முன்பதிவு செய்த பயணச்சீட்டு உறுதிப்படுத்தல் பக்கத்தில் உள்ள 'Book Return Ticket (20% Discount)' பொத்தானை அழுத்தித்தான் முன்பதிவு செய்ய வேண்டும். இது வழிகாட்டப்பட்ட முன்பதிவு முறை என்பதால், புறப்படும் மற்றும் சேரும் நிலையங்கள், பயணிகளின் பட்டியல், வகுப்பு ஆகியவை தானாக நீங்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டிலிருந்து எடுத்துக்கொள்ளப்படும். பயணத் தேதியை மட்டும் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பிறகு, ரயிலைத் தேர்வு செய்து, முன்பதிவு செயல்முறையைத் தொடரலாம். வெற்றிகரமாகப் பணம் செலுத்திய பிறகு, திரும்பி வரும் பயணத்திற்கான பயணச்சீட்டு உறுதிப்படுத்தப்படும்.

Advertisment
Advertisements

இந்தத் திட்டத்தின் கீழ் முன்பதிவு செய்யப்படும் பயணச்சீட்டுகளில், ஒரு பயணச்சீட்டின் பி.என்.ஆர். எண்ணை மற்றொரு பயணச்சீட்டிலும் பார்க்க முடியும். திரும்பும் பயணச்சீட்டை முன்பதிவு செய்ய, முன்கூட்டியே முன்பதிவு செய்யும் காலம் பொருந்தாது. போகும் மற்றும் திரும்பி வரும் பயணச்சீட்டுகளைப் பதிவு செய்ய, பயணத் தேதிகள் திட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

Indian Railways

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: