கட்டணமில்லாத வருவாயை அதிகரிக்க இந்திய ரயில்வே ஆரோக்கிய ஏடிஎம்களை நிறுவி விரைவான பரிசோதனைகளை அதன் மூலம் நடத்தி வருகிறது.
சங்கர் தயாள், நாக்பூர் ரயில் நிலையத்தில் அவரது ரயிலுக்காக ஒன்றாம் எண் நடை மேடையில் உள்ள காத்திருப்போர் அறையில் காத்து இருக்கையில் அந்த அறையின் ஒரு மூலையில் இருந்த ‘ஆரோக்கிய ஏடிஎம்’ (health ATM) என்று எழுதப்பட்ட அந்த வெள்ளை நிற இயந்திரம் அவரது கண்களில் தெரிந்தது. அவர் ஏற வேண்டிய ரயில் வர அரை மணி நேரம் இருந்ததால் அவர் அந்த இயந்திரத்தின் அருகில் சென்று பார்த்தார். அந்த இயந்திரத்தின் அருகில் இருந்த மருத்துவ உதவியாளர் அந்த இயந்திரத்தின் கைபிடிகளை பிடித்துக் கொண்டு எடை மேடை போல செயல்படும் அந்த இயந்திரத்தோடு இணைக்கப்பட்டிருந்த அதன் பீடத்தின் மீது ஏறி நிற்க கூறினார்.
இளம் வயதில் தென் அமெரிக்க சிகரத்தை தொட்ட இந்திய மாணவி!
சில வினாடிகளில் அந்த இயந்திரத்திலிருந்து ஒரு அச்சிடப்பட்ட தாள் வந்தது. அதில் சங்கர் தயாளின் உடல் எடை (Body Mass Index), அவரது உடலில் குறைவாக இருந்த தண்ணீரின் அளவு (hydration level) ஆகியவை பகுப்பாய்வு செய்யப்பட்டு வந்தது. மேலும் அவருடைய உடலில் இயல்பான அளவில் இருந்த ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு மற்றும் ரத்த அழுத்த அளவு ஆகியவையும், அவரது உடலில் குறைவாக இருந்த புரதத்தின் அளவும் அந்த தாளில் இடம்பெற்றிருந்தன.
இவை அனைத்தும் 60 ரூபாய் செலவில் சில வினாடிகளில் அதுவும் ரயில் நிலையத்திலேயே பரிசோதிக்கப்பட்டு விட்டன. ஒரு பரிசோதனை கூடத்தில் சில அடிப்படை பரிசோதனைகள் செய்ய குறைந்தது 200 ரூபாய் செலவு ஆகும். ஆனால் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பதை போல இது மிக எளிதாக இருந்தது என சங்கர் தெரிவித்தார்.
இந்த வகை ஆரோக்கிய ஏடிஎம் கள் இந்திய ரயில்வேயின் புதுமையான யோசனை திட்டம் (New Innovative and Idea Scheme) கீழ் கட்டணம் இல்லா வருவாயை அதிகரிக்கும் நோக்கில் நிறுவப்பட்டுள்ளன.
பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு வருகை