உடற்பயிற்சி செய்தால் இலவச ரயில் டிக்கெட் – மத்திய அரசின் திட்டத்துக்கு பெரும் வரவேற்பு (வீடியோ)

புதிதாக வைக்கப்பட்டுள்ள இயந்திரத்தில் 3 நிமிடங்களில் 30 முறை உடற்பயிற்சி செய்தால் நடைபாதை டிக்கெட்டை இலவசமாகப் பெறலாம்" எனத் தெரிவித்துள்ளார்

By: February 21, 2020, 9:45:35 PM

மத்திய அரசு ஃபிட் இந்தியா (உடல் தகுதி) திட்டத்தை மக்களிடையே புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் நடைபாதை டிக்கெட் வேண்டுமெனில், அங்கு அமைக்கப்பட்டுள்ள இயந்திரத்தில் 3 நிமிடங்களில் 30 முறை தோப்புக்கரணம் போடுவது போன்று உட்கார்ந்து எழுந்தால் இலவசமாக டிக்கெட் பெறலாம்.


இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ட்விட்டரில் கூறுகையில், “உடலை ஆரோக்கியமாக வைத்து, பணத்தையும் சேமியுங்கள். மக்களுக்கு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் புதிய முறையைப் பரிசோதனை முயற்சியாகத் தொடங்கியுள்ளோம். புதிதாக வைக்கப்பட்டுள்ள இயந்திரத்தில் 3 நிமிடங்களில் 30 முறை உடற்பயிற்சி செய்தால் நடைபாதை டிக்கெட்டை இலவசமாகப் பெறலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ ட்விட்டரில் கூறுகையில், ” ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளார். உடலையும் ஆரோக்கியமாக வைத்து பணத்தையும் சேமிக்கலாம். ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில், உள்ள இயந்திரத்தில் 3 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்து இலவசமாக நடைபாதை டிக்கெட் பெறலாம். பிரதமர் மோடியால் ஃபிட் இந்தியா இயக்கம் அறிமுகம் செய்யப்பட்டது” எனத் தெரிவித்தார்.

ரஷ்யாவில் இது போன்ற ‘பயிற்சி செய்தால் இலவச டிக்கெட்’ திட்டம் கடந்த சில ஆண்டுகளாகவே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

நமஸ்தே டிரம்ப்: அமெரிக்க அதிபரை வரவேற்க தயாராகும் ஆக்ரா, அகமதாபாத்; புகைப்படங்கள்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Indian railways show your fitness skills get free platform ticket watch video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X