அமலுக்கு வந்தது புதிய ரயில் கட்டணம்… சேவைக் கட்டணமும் வசூலிக்கப்படும்…

indian railways ticket booking : சேவை கட்டணத்துடன் ஜி.எஸ்.டி வரியும் தனியே வசூலிக்கப்படும்

By: Updated: September 2, 2019, 05:34:05 PM

indian railways ticket booking online : இந்திய பொருளாதார நிலை மிகவும் மந்தமான சூழலில் இருக்கின்ற நேரடத்தில் பல இடங்களில் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பினை இழக்கும் அபாயத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தின் விலையும் உயர்ந்து வருகின்றது.

ஏற்கனவே பால் முதல், டீசல், பெட்ரோல் என அனைத்து விலையும் உயர்ந்திருக்கின்ற நிலையில் ரயில்வே டிக்கெட்களின் விலையும் தற்போது உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சாமானிய மனிதர்களின் அன்றாட வாழ்வில் மிகப் பெரும் தாக்கத்தை நிச்சயமாக ஏற்படுத்தும்.

ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில்  அதிகாரப்பூர்வ தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 3 வருடங்களுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட இந்த நடைமுறை  நாளை( 1.9.19) முதல் மீண்டும் அமலுக்கு வருகிறது. இந்த தகவலை  முடிந்தவரை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

நாளை முதல் ரயில்களில் ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கு சேவைக்கட்டணம் அதிகபட்சமாக 30 ரூபாய் வசூலிக்கப்படும் என IRCTC அறிவித்துள்ளது. இதனால் ஆன்லைனில் டிக்கெட்களின் விலை உயர்ந்துள்ளது.

indian railways ticket booking online price:  இனி சேவைக்கட்டணமும் உண்டு!

இனிமேல் ரயில்களில் ஸ்லீப்பர்களில் பயணிப்பவர்களுக்கான டிக்கெட் தொகையோடு சேவை கட்டணமாக 15 ரூபாயும், AC கோச்களில் பயணிப்பவர்களுக்கு டிக்கெட் தொகையோடு கூடுதலாக 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் . இந்த தகவலை ஐஆர்சிடி தெரிவித்துள்ளது.  எனவே இனிமேல்  ஆன்லைனில் ரயில் டிக்கெட் புக் செய்பவர்கள் கூடுதல் கட்டணமாக சேவைக்கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.

சாதாரண வகுப்புக்கு ரூ.15, ஏசி வகுப்புக்கு ரூ.30 கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சேவை கட்டணத்துடன் ஜி.எஸ்.டி வரியும் தனியே வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரிசர்வ் சீட்டில் எத்தனை மணி நேரம் பயணிகள் தூங்க வேண்டும் தெரியுமா?

டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிற்பதற்காக 3 ஆண்டுகளாக இந்த சேவைக்கட்டண முறை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் இந்த புதிய நடைமுறை செயல்பாட்டு வருகிறது.  இனிமேல் பயணிகள் டிக்கெட் விலையுடன் சேர்த்து குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் தான் டிக்கெட் புக் செய்ய முடியும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the India News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Indian railways ticket booking online indian railways ticket booking indian railways ticket booking app irctc ticket booking

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X