indian railways ticket booking rules : வெளியூர் செல்ல கடைசி நிமிடத்தில் அவசர அவசரமாக ஆன்லைனில் டிக்கெட் புக் செய்தவர்கள் கடைசியில் பயணத்தை கேன்சல் நிலைமை ஏற்படலாம். இது பயணத்தில் நடக்கும் சகஜமான ஒன்று தான். அப்படி ஏற்படும் போது பயணிகள் முதலில் நினைத்து வருந்துவது புக் செய்யப்பட்ட டிக்கெட் குறித்து தான்.
Advertisment
காரணம், ஒருகுறிப்பிட்ட தொகையை செலுத்தி டிக்கெட் புக் செய்து விட்டு அதை கேன்சல் செய்தால் பாதி தொகை கூட திரும்ப கிடைக்காது. நஷ்டம் தான். இந்த கவலைய இனிமே விடுங்க. இந்தியன் ரயில்வேஸ் அறிமுகப்படுத்தி இருக்கும் அசத்தலான திட்டம் பற்றி இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள். இனிமேல் நீங்கள் கேன்சல் செய்த டிக்கெட்டுக்கு ஓடிபி வழியாக பணம் கிடைக்க போகிறது.
அதாவது, ரத்து செய்யப்பட்ட அல்லது முழுமையாக காத்திருப்பு பட்டியில் இருந்து விலக்கப்பட்ட டிக்கெட்டுகளுக்கு ரீஃபண்ட் (refund amount) மொபைல் ஓடிபி மூலம் பெறலாம். கடந்த செவ்வாய்கிழமை இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்தியன் ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
indian railways ticket booking rules : ஓடிபி முறையில் பணம் பெறுவது எப்படி?
Advertisment
Advertisements
இந்தியன் ரயில்வே நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஐஆர்சிடிசி வழியாக டிக்கெட் புக் செய்தவர்கள் அல்லது ஐஆர்டிசிடி அதிகாரப்பூர்வ டிக்கெட் ஏஜெண்ட் மூலம் டிக்கெட் புக் செய்த பயணிகள் ஓடிபி வழியாக பணத்தை பெறலாம்.
பயணிகளின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓடிபி குறுஞ்செய்தியாக வரும். இந்த ஓடிபி நம்பரை பதிவு செய்து பயணிகள் தங்களது பணத்தை பெறலாம். அதே போல் நீங்கள் பணத்தை பெற்று விட்டதற்கான தகவலும் கணினியில் பதிவு செய்யப்படும். வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவே இந்த முறை. உங்கள் ஓடிபி நம்பரை ஏஜெண்ட்டிடம் தெரிவித்தால் அவர் பணத்தை பெற்று உங்களிடம் ஒப்படைப்பார்.
கேன்சல் ஆகும் டிக்கெட்டுகளுக்கு முறையாக ரீஃபண்ட் வழியை நெறிப்படுத்த இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் பயணிகளுக்கு அவர்களின் பணம் திருப்பி அளிக்கப்படும். இனிமேல் பயணிகளாகிய நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது இதுதான்.ரயில்வே டிக்கெட்டை புக் செய்யும் போது சரியான மொபைல் நம்பரை கொடுக்க வேண்டும்.