2047-க்குள் 7,000 கி.மீ. புதிய ரயில் பாதைகள், 320 கி.மீ. வேகத்தில் அதிவேக ரயில்கள் - இந்திய ரயில்வே திட்டம்!

சரக்குப் போக்குவரத்தில் பிரத்தியேக சரக்கு வழித்தடங்கள் (DFC) வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அடுத்த 30 ஆண்டுகளில் பிரத்தியேக பயணிகள் வழித்தடங்களை (Dedicated Passenger Corridors - DPC) உருவாக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Indian Railways

2047-க்குள் 7,000 கி.மீ. புதிய ரயில் பாதைகள், 320 கி.மீ. வேகத்தில் அதிவேக ரயில்கள் - இந்திய ரயில்வே திட்டம்!

சரக்குப் போக்குவரத்தில் பிரத்தியேக சரக்கு வழித்தடங்கள் (DFC) வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அடுத்த 30 ஆண்டுகளில் பிரத்தியேக பயணிகள் வழித்தடங்களை (Dedicated Passenger Corridors - DPC) உருவாக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

Advertisment

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

16-வது சர்வதேச ரயில்வே உபகரணங்கள் கண்காட்சி (IREE) 2025-ல் பேசிய ரயில்வே அமைச்சர், “நாம் 1.4 பில்லியன் மக்கள் கொண்ட நாடு; போக்குவரத்துக்கான தேவை மிகப்பெரியது. இதேபோன்ற பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளில் வெற்றிகரமான உதாரணங்கள் உள்ளன. எனவே, பிரத்தியேக பயணிகள் வழித்தடங்களை அமைக்கும் பணியைத் தொடங்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.

பிரத்தியேக பயணிகள் வழித்தடங்களை உருவாக்குதல் (DPC)

‘விக்‌ஷித் பாரத்’ இலக்கு: நாட்டின் வளர்ச்சி இலக்கான ‘விக்‌ஷித் பாரத்’ திட்டத்தின் ஒருபகுதியாக, 2047-ம் ஆண்டுக்குள் சுமார் 7,000 கி.மீ. நீளமுள்ள பிரத்தியேக வழித்தடங்கள் நாடு முழுவதும் அமைக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் தெரிவித்தார். இந்தப் புதிய வழித்தடங்கள், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட சமிக்ஞை அமைப்புகள் (signalling systems) மற்றும் நவீன செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையங்களுடன் (Operations Control Centres - OCCs) இணைக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

பிரத்தியேக பயணிகள் வழித்தடங்கள் (DPC) அதிகபட்சமாக 350 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. இதன் செயல்பாட்டு வேகம் (operational speed) 320 கி.மீ. ஆக இருக்கும். அதாவது, இந்த வழித்தடங்களில் ரயில்கள் 320 கி.மீ. வேகத்தில் இயங்கும், ஆனால் இதன் வடிவமைப்பு வேகம் 350 கி.மீ. வரை இருக்கும்.

Advertisment
Advertisements

இந்திய ரயில்வேயின் நவீனமயமாக்கல்

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர், இந்திய ரயில்வேயை நவீனமயமாக்குவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு உள்ளது என்றார். இதற்காக ரயில்வே பட்ஜெட் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் 35,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான புதிய தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் 46,000 கிலோ மீட்டருக்கு மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்துள்ளன.

தற்போது நாடு முழுவதும் 156 வந்தே பாரத் சேவைகள், 30 அம்ரித் பாரத் சேவைகள் மற்றும் 4 நமோ பாரத் சேவைகள் இயங்கி வருகின்றன. 2024-25-ம் ஆண்டில், சாதனையாக 7,000-க்கும் மேற்பட்ட பெட்டிகள் (coaches), சுமார் 42,000 வேகன்கள் மற்றும் 1,681 என்ஜின்கள் (locomotives) உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் முதல் 9,000 ஹெச்பி (HP) திறன் கொண்ட மின்சார எஞ்சின் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது, மேலும் 12,000 ஹெச்பி திறன் கொண்ட எஞ்சின்கள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன என்றும் அமைச்சர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

indian railway

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: