Indian Railways to Facilitate Online Ticket Booking Service for Passengers: ரயிலில் காலியான சீட்டுகளை பயணிகள் கண்டறிய புதிய திட்டம் அறிமுகம்.
ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது அமைச்சகத்துடன் நடத்திய ஆலோசனையின் அடிப்படையில், ரயில் பயணிகளுக்கு ஏர் டிக்கெட் புக்கிங் போன்ற புதிய வசதியை அறிமுகம் செய்ய இருக்கிறார். இந்த திட்டம் அமலுக்கு வந்தால், பயணிகள் எந்த சீட்டுகள் காலியாக உள்ளது என்பதை புக்கிங் செய்யும்போது பார்த்துக்கொள்ளலாம்.
Indian Railways : ரயில் காலி சீட்டுகள் பார்க்க புதிய திட்டம்
பொதுவாகவே டிக்கெட் புக்கிங் செய்யும்போது பயணிகள் பல சிரமங்களுக்கு ஆளாகிறார்கள். குடும்பமாக செல்லும்போதெல்லாம், ஒருவர் ஒரு கம்பார்மெண்டிலும், மற்றொருவர் வேறு ஒரு கம்பார்மெண்டிலும் டிக்கெட் கிடைத்து பயணிக்கும் கடினம் ஏற்படுகிறது. இதனால் பலரும் இது குறித்து கருத்துக்களை புகார்களையும் வைத்து வருகிறது.
CRIS இந்த விஷயத்தை கையில் எடுத்து, புதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறது. இதன் மூலம், பயணிகள் தங்களின் சீட்டுகள் எங்கே காலியாக உள்ளது என்று பார்த்து புக் செய்யலாம். அதுமட்டுமின்றி, டிக்கெட்டுகள் பதிவு செய்தோரின் பட்டியலை, கணினி மற்றும் செல்போன்களின் பார்த்து ஊர்ஜிதப்படுத்தும் வசதியும் கொண்டு வரும் முயற்சி எடுக்கப்படுகிறது. உங்களின் PNR நம்பர் பதிவிட்டால் போதும், பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை பார்க்கலாம்.
ரயில் பயணிகளுக்கு பயணங்களை வசதியாக்கிக் கொடுக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டுமே சுமார் 10 வகையான புதிய எளிய திட்டங்களை அமல்படுத்தியுள்ளது ரயில்வேத்துறை.
திருப்பதி, ராமேஸ்வரம், பத்மாவதி கோவிலுக்கு செல்ல வேண்டுமா? IRCTC புதிய திட்டம்
ரயில்வே நிலையங்களை மட்டும் வசதியாகி தருவதோடு நிறுத்தாமல், ரயில்களிலும் கழிப்பறை போன்ற சுகாதார செயல்பாடுகள் கொண்டு வரப்பட்டது. இதோடு பயணிகள் டிக்கெட் கட்டணங்களை எளிமையாக செலுத்தவும், விரைவில் டிக்கெட் பெறவும் பல முன்னேற்றங்களை செய்துள்ளது.