ரயில்வே தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு, பயணிகள் பிரிவில் வருவாய் இழப்பைக் குறைக்க குளிரூட்டப்பட்ட (ஏசி) வகுப்புக் கட்டணங்களை மறுஆய்வு செய்ய பரிந்துரைத்துள்ளது. அதே நேரம் பொது வகுப்பு கட்டணத்தை குறைந்த விலையில் வைத்திருப்பதை உறுதி செய்கிறது.
இந்திய ரயில்வேயின் ஒட்டுமொத்த நிதி ஆரோக்கியத்தைப் பாதிக்கும் பயணிகள் மற்றும் சரக்குப் பிரிவுகளுக்கு இடையேயான குறிப்பிடத்தக்க வருவாய் ஏற்றத்தாழ்வு குறித்த கவலைகளிலிருந்து இந்தப் பரிந்துரை வந்துள்ளது.
பா.ஜ.க ம்பி சி.எம்.ரமேஷ் தலைமையிலான குழு, 2024-25 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு விவரங்களை காண்பித்தது. அதில் சரக்குகள் மூலம் ரூ. 1.8 லட்சம் கோடியும், பயணிகள் வருவாய் மூலம் ரூ.80,000 கோடியும் வரவு வந்துள்ளது.
கூடுதலாக, பயணிகள் ரயில்களுக்கான செயல்பாட்டுச் செலவுகளை மறுஆய்வு செய்யவும், டிக்கெட்டுகளின் மலிவுத்தன்மையை பராமரிக்க செலவுகளை மேம்படுத்தவும் இந்திய ரயில்வே அறிக்கை வலியுறுத்தியது.
ஒவ்வொரு டிக்கெட்டிலும் 46% தள்ளுபடி உட்பட ஆண்டுக்கு ரூ.56,993 கோடி சலுகைகள் மூத்த குடிமக்கள் சலுகைகளை மீண்டும் வழங்குவது சாத்தியமில்லை என்று ரயில்வே அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்திய ரயில்வே தனியார் மயமாக்கப்படுமா?
ரயில்வே தனியார்மயமாக்கல் தொடர்பாக மக்களவையில் நடந்த காரசாரமான விவாதத்தைத் தொடர்ந்து, இந்திய ரயில்வே அதன் உள்கட்டமைப்பில் தனியார் துறையின் ஈடுபாடு அதிகரிப்பதை ஆராய வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.
இருப்பினும், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அவையில் தனது பதிலின் போது இந்த கூற்றுக்களை எதிர்த்தார். ரயில்வே தனியார்மயமாக்கல் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“