IRCTC: ஆன்மீக கடவுள் ராமர் வழிபாட்டிற்காக டெல்லியில் இருந்து ராமேஸ்வரம் வரை செல்லும் பயணிகளுக்காக ‘ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் புதிய ரயில் சேவை நவம்பர் மாதம் அறிமுகமாக உள்ளது. ராமேஸ்வரம் வழியாக இந்த பயணம் இலங்கைக்கும் நீடிக்கிறது. இந்த சிறப்பு ஏற்பாடுகளை IRCTC செய்துள்ளது.
IRCTC, தனி யாத்திரை ரயில் மூலம், இந்தியாவில் உள்ள பல்வேறு புண்ணிய ஸ்தலங்களுக்கும் சுற்றுலா இடங்களுக்கும் யாத்திரைகளை ஏற்பாடு செய்து வருகிறது. அந்த வகையில், ராமாயண யாத்திரைக்காக ராமர் பிறந்த இடமான அயோத்தியில் இருந்து, சீதையை ராவணன் இலங்கையில் சிறை வைத்திருந்ததாக கூறப்படும் பகுதி வரை சிறப்பு ஆன்மிக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த அறிவிப்பை ரயில்வேதுறை அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீ ராமாயணா ரயில் பற்றிய தகவல்கள்:
ராமாயணா எக்ஸ்பிரஸ் என்று அறிமுகப்படுத்தியுள்ள இந்த ரயில், டெல்லியிலுள்ள சாஃப்தார்ஜுங் ரயில் நிலையத்திலிருந்து நவம்பர் 14ம் தேதி புறப்படும். அங்கிருந்து புறப்படும் ரயில் முதலில் அயோத்தியில் நிறுத்தப்படும். இங்கு ராமர், அனுமான் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்து விட்டு நந்திகிராம், சீதாமர்கி வழியாக நேபாளத்தில் உள்ள ராமாயண கால புராதன நகரமான சீதை பிறந்த இட மாகக் கருதப்படும் ஜானக்பூருக்கு ரயில் செல்லும். அங்குள்ள ஜானகி மந்திரில் நடக்கும் சிறப்பு பூஜைகளில் ஆன்மிக சுற்றுலா பக்தர்கள் கலந்துகொள்ள முடியும்.
இதைத் தொடர்ந்து ஜானக்பூர், வாரணாசி, பிரயாக், சித்ராகூட், நாசிக், ஹம்பியில் உள்ள புனித வழிபாட்டுத் தலங்களை தரிசித்து விட்டு, ராமேஸ்வரத்துக்கு இந்த ராமாயணா எக்ஸ்பிரஸ் ரயில் வந்தடைகிறது. பிறகு ராமேஸ்வரத்தில் ராமநாத சுவாமி கோயில், ராமர்பாதம், கோதண்டராமர் கோயில் உள்ளிட்ட ஸ்தலங்களை தரிசித்துவிட்டு ராமாயணா எக்ஸ்பிரஸ் மீண்டும் சென்னை வந்தடைகிறது.
இந்த ராமாயணா எக்ஸ்பிரஸ் ரயிலில் மொத்த இருக்கைகளின் எண்ணிக்கை 800 ஆகும். ஒருவருக்கான மொத்த பயணக் கட்டணம் ரூ. 15,120 ஆகும். இந்தக் கட்டணத்தில் பயணிகளுக்கு உணவு, ஆன்மிக ஸ்தலங்களில் ன்இப்பததங்குமிடம் ஏற்பாடு செய்யப்படும். மேலும் இந்தக் கட்டணம் இந்தியாவிற்குள் பயணிப்பதற்கு மட்டுமே. ராமாயணா பயணம் இலங்கைக்கு தொடர விரும்புபவரகளுக்கு கூடுதல் கட்டணம் செலுத்தப்படும்.
இந்த யாத்திரை தொடர்பான மேலும் விவரங்களை irctc.co.in என்ற இணையதளம் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.