மோடிக்காக 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்தப்படி இளம்பெண் செய்த செயல்!

விமானத்திலிருந்து கீழே குதித்து பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து

விமானத்திலிருந்து கீழே குதித்து பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மோடி

மோடி

மோடி பிறந்த நாளன்று, 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்தப்படி ஸ்கை டைவர் பிறந்த நாள் வாழ்த்து கூறிய சம்பவம் பலரையும்  திகைக்க வைத்துள்ளது.

Advertisment

மோடி பிறந்த நாள்:

பிரதமர் நரேந்திர மோடி நேற்று (17.8.19) தனது 68 வது பிறந்த நாளை  வாரணாசியில் கொண்டாடினார். இதையடுத்து, பிரதமர் மோடிக்கு பல்வேறு தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இதை தொடர்ந்து, நேற்று இந்திய ஸ்கை டைவர் ஷீடால் மகாஜன் என்ற பெண்மணி 13,000 அடி உயரத்தில் பரந்த விமானத்திலிருந்து கீழே குதித்து பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

சிகாகோவில் இதற்கான சிறப்பு பயிற்சியை பெற்ற இவர் பத்ம ஸ்ரீ விருது வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படங்களை இவர்  ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் வீடியோ மூலமும் அவர் பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 

சக இந்திய ஸ்கை டைவர் சுதிப் கொடவாத்தி இந்த வீடியோவை எடுத்துள்ளார் என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Narendra Modi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: