Advertisment

அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் பலி: காணாமல் போனவர் சடலமாக மீட்பு

கடந்த மாதம் காணாமல் போன 25 வயது இந்திய மாணவர் முகமது அப்துல் அர்பாத், ஓஹியோவில் உள்ள கிளீவ்லேண்டில் உயிரிழந்துவிட்டதாக நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் இன்று தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Indian student Mohammed Abdul Arfath who was missing found dead in US Tamil News

பர்டூ பல்கலைக்கழகத்தின் 23 வயது மாணவர் சமீர் காமத், பிப்ரவரி 5 அன்று இந்தியானாவில் இறந்து கிடந்தார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

United States Of America | Student: இந்தியாவின் ஐதராபாத்தில் உள்ள நாச்சரம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அப்துல் அர்பாத் (வயது 25). இவர் கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் உள்ள கிளீவ்லேண்ட் மாநில பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பதற்காக அமெரிக்கா வந்திருந்தார். அங்கு தனது படிப்பை தொடர்ந்து அவர்  கடந்த மாதத்தில் காணாமல் போனார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவனை தேடியும்  வந்தனர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: Another Indian student, who was missing, found dead in US

இந்நிலையில், காணாமல் போன மாணவன் முகமது அப்துல் அர்பாத் உயிரிழந்துவிட்டதாக நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் இன்று காலையில் தெரிவித்துள்ளது. மாணவனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தூதரகம், அவரது உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதற்கு தேவையான உதவிகளை செய்வதாக கூறியிருக்கிறது.

மேலும், மாணவனின் மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதை உறுதி செய்வதற்காக உள்ளூர் விசாரணை அமைப்புகளிடம் தூதரகம் இணைந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மாணவன் அர்பாத்தின் தந்தை முகமது சலீம் பேசுகையில், "என் மகனிடம் கடைசியாக மார்ச் 7-ம் தேதி பேசினேன். அதன்பின் அவனது செல்போன் சுவிட்ஆப் ஆகிவிட்டது. மார்ச் 19-ம் தேதி அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், என் மகனை போதைப்பொருள் விற்பனை கும்பல் கடத்தி வைத்திருப்பதாகவும், 1,200 டாலர் கொடுத்தால் விடுவிப்பதாகவும் கூறினான்.

ஆனால் பணத்தை எப்படி செலுத்த வேண்டும் என்பதை அந்த நபர் குறிப்பிடவில்லை. எனது மகனை என்னுடன் பேசச் சொல்லுங்கள் என்று கேட்டபோது, அந்த நபர் மறுத்துவிட்டார்." என்று அவர் கூறினார்.  எனவே, மாணவன் அர்பாத்தை போதைப்பொருள் விற்பனை கும்பல் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

அமெரிக்காவில் இந்த ஆண்டில் இதுவரை 11 இந்திய அல்லது இந்திய வம்சாவளி மாணவர்களை இறந்துள்ளனர். பிப்ரவரி 1 ஆம் தேதி, ஓஹியோவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர் ஷ்ரேயாஸ் ரெட்டி பெனிகேரி இறந்து கிடந்தார். மார்ச் 18 அன்று, பாஸ்டனில் இந்திய மாணவர் அபிஜீத் பருச்சுரு இறந்தார்.

பர்டூ பல்கலைக்கழகத்தின் 23 வயது மாணவர் சமீர் காமத், பிப்ரவரி 5 அன்று இந்தியானாவில் இறந்து கிடந்தார். ஜனவரியில் மற்றொரு சம்பவத்தில், 25 வயதான விவேக் சைனி வீடற்ற போதைக்கு அடிமையான ஜார்ஜியாவைச் சேர்ந்த ஒருவரால் சுத்தியலால் அடித்துக் கொல்லப்பட்டார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

United States Of America Student
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment