உக்ரைன் தலைநகர் கீவில் இந்திய மாணவர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் இணை அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங், இந்தியர்களை மீட்கும் பணிக்காக போலந்து சென்றுள்ளார்.
போலந்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், " கிவ் நகரத்தில் விட்டு வெளியேறிய மாணவர்கள் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக தகவல் கிடைத்தது. காயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக மீண்டும் கிவ் நகரத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று காலை நடந்தது" என்றார்.
அண்மையில் மார்ச் 1 அன்று, இந்திய மாணவர் நவீன் கார்கிவ் நகரில் உணவு வாங்க சென்ற போது, ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பேசிய சிங், " உக்ரைனில் இருந்து முடிந்தவரை குறைவான இழப்புடன் அதிகபட்ச எண்ணிக்கையிலான மாணவர்கள் வெளியே வருவதை உறுதிசெய்ய மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.
ரஷ்ய படையெடுப்பு காரணமாக, பிப்ரவரி 24 அன்று உக்ரைன் விமான நிலைமை மூடப்பட்டதை தொடர்ந்து, அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி, போலந்து ஆகிய நாடுகளில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil