வட அமெரிக்க நாடான கனடாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் சமர்ப்பிக்கப்பட்ட அனுமதி கடிதங்கள் போலியானவை என அதிகாரிகள் கண்டறிந்ததை அடுத்து, 700க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் அங்கிருந்து இருந்து நாடு கடத்தப்பட இருப்பதாகவும், இந்த நாடு கடத்தல் கடிதங்களை கனடா எல்லைப் பாதுகாப்பு ஏஜென்சி (சிபிஎஸ்ஏ – CBSA) மாணவர்களுக்கு வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கனடாவில் இந்திய மாணவர்கள் வெளியேற்றம் குறித்த கடிதம் மீது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு வெளியான ஒரு நாள் கழித்து, இந்திய அரசாங்கம் இதனை வரவேற்றதாக அறியப்படுகிறது. அதே நேரத்தில் அங்குள்ள மாணவர்களின் உண்மையான எண்ணிக்கை 700க்கும் குறைவாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
'இந்த தடை உத்தரவு வரவேற்கத்தக்கது. இந்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகள், கனடா அரசாங்கம் ஒரு மனிதாபிமான அணுகுமுறையை ஏற்றுக்கொள்வதற்கும், மாணவர்களின் கண்ணோட்டத்தை உள்வாங்குவதற்கும் கருவியாக உள்ளது. கனடா மற்றும் புது தில்லியில் உள்ள கனடா அதிகாரிகளிடம் இந்தியா இந்த பிரச்சினையை எழுப்பி வருகிறது என்று இந்த விஷயத்தை நன்கு அறிந்த ஒரு ஆதாரம் தெரிவித்துள்ளது
வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கரும் தனது கனேடிய பிரதிநிதி மற்றும் கிழக்கு செயலாளரிடம் இந்த விஷயத்தை எடுத்து சென்றார், மேலும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தனது கனடா பயணத்தின் போது அதை எழுப்பினார்.
டொராண்டோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் பெரும்பாலான மாணவர்களை ஜெய்சங்கர் சந்தித்தார்.
கனேடிய அமைப்பில் இடைவெளிகள் இருப்பதாக கனேடிய அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டப்பட்டது. இதன் காரணமாக மாணவர்களுக்கு விசா வழங்கப்பட்டதுடன் கனடாவிற்குள் நுழையவும் அனுமதிக்கப்பட்டது,. பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை, 700க்கும் குறைவானது.
இந்த மாணவர்களில் பெரும்பாலானோர் 2017-2019 காலகட்டத்தில் கனடா சென்றுள்ளனர். படிப்பை முடித்த பிறகு, அவர்களில் சிலர் பணி அனுமதியைப் பெற்றனர், மற்றவர்கள் கனடாவில் தொடர்ந்து படிக்கிறார்கள், என்று ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக, அரசியல் கட்சிகள் முழுவதிலும் கனடா நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாணவர்களுக்கு ஆதரவாகப் பேசினர். நிச்சயமற்ற தன்மையை எதிர்நோக்கும் சர்வதேச மாணவர்களுக்கான தீர்வை கனடா தீவிரமாக முன்னெடுத்து வருவதாக குடிவரவு அமைச்சர் சீன் பிரேசியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாணவர்களை நியாயமாக நடத்த வேண்டியதன் அவசியத்தை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.