Advertisment

தண்ணீருக்காக ஐஸ் கட்டியை கொதிக்க வைத்தோம் : உக்ரைனில் தவிக்கும் இந்தியர்கள்

Tamil Update For Ukraine War : வீடியோவில், மாணவர்கள் பைகளில் பனியைக் குவிப்பதையும், குடிப்பதற்காக மரங்களிலிருந்து விழும் பனிக்கட்டி நீரின் துளிகளை சேகரிப்பதையும் காட்டியுள்ளார்.

author-image
WebDesk
New Update
தண்ணீருக்காக ஐஸ் கட்டியை கொதிக்க வைத்தோம் : உக்ரைனில் தவிக்கும் இந்தியர்கள்

Ukraine Russia War Update In tamil : உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 2-வது வாரத்தை கடந்துள்ள நிலையில், நாளுக்கு நாள் தாக்குதலின் தீவிரம் அதிகரித்து வருகிறது. இதனால் உக்ரைனில் இருந்து நாள் தோறும் ஆயிரக்காணக்காக மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளின் தஞ்சமடைந்து வரும் நிலையில், அங்கு சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் மற்றும் குடிமக்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

Advertisment

ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் தொடங்கியுள்ள இந்த விமான சேவையில் உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா போலந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்காக இந்திய மாணவர்கள் மற்றும் குடி மக்கள் உக்ரைனில் இருந்து இந்தியாவிற்கு திரும்பி வந்துகொண்டிருக்கினறனர்.  

உக்ரைனின் வடகிழக்கு பகுதியான சுமியில் சிக்கியுள்ள மாணவி மயூரி அஹெர் கூறுகையில்,

"நாங்கள் மீட்கப்படுவோம் என்ற நம்பிக்கையை விட்டுவிட்டோம். சில நேரங்களில், இந்திய அரசாங்கம் எங்களுக்கு தவறான நம்பிக்கையை அளிப்பதாக நான் உணர்கிறேன். இந்திய தூதரகம் எங்களை மீட்பதாகச் சொல்கிறது, ஆனால் எத்தன நாட்களுக்குள் என்பது குறித:து எவ்வித தகவலும் இல்லை. இதனால் நான் நம்பிக்கையற்றவனாக உணர்கிறேன்.  

நேற்றைய குண்டுவெடிப்புக்குப் பிறகு, எங்கள் கல்லூரி விடுதி உட்பட சுமியின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் அவசிய தேவைக்காகவும், குடிப்பதற்கும் கூட நாங்கள் பனியைக் கொதிக்க வைத்து பயன்படுத்தி வருவதாக கூறியுள்ளார்.

மேலும் அஹெர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், கூறுகையில், நாங்கள் அழைத்தாலும் தூதரகம் எங்களின் அழைப்புகளை எடுத்துக்கொள்வதை நிறுத்திவிட்டதாகவும், தற்போது"அடிப்படை நிலைமைகளைக் கொண்ட சில மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதற்கிடையில், சுமி பல்கலைக்கழகத்தின் 800 க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள், போரினால் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து தாங்கள் மீட்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்திடமும் பிரதமர் நரேந்திர மோடியிடமும் அவநம்பிக்கையான வேண்டுகோளை விடுத்தனர்,  அவ்வாறு மீட்கப்படவில்லை என்றால் நாங்கள் அனைவரும் கொல்லப்படுவோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

வீடியோவில், மெஹ்தாப் என்ற மாணவர் கூறுகையில், கல்லூரியில் உள்ள பல்வேறு விடுதிகளில் சுமார் 800 மாணவர்கள் உள்ளனர். நேற்று இரவு பெரும் வெடிவிபத்து ஏற்பட்டதையடுத்து, குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. நேற்று இரவிலிருந்து பசியும் தாகமுமாக வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது. உணவு இல்லை... குடிக்க தண்ணீர் இல்லை. எங்களால் இந்திய அரசின் தலையீடு இல்லாமல் சுயமாக வெளியேற முடியாது,

அப்படி வெளியில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிபவர்கள் இருக்கிறார்கள்; நாங்கள் சொந்தமாக வெளியேற முயற்சித்தால் வான்வழித் தாக்குதல் அல்லது துப்பாக்கிச் சூடு நடக்கலாம். என்று கூறியுள்ளார். மேலும் ஜீரோ டிகிரி  “மேற்கு எல்லையில் இருந்து வெளியேற வேண்டும் என்றால் நாங்கள் தாக்குதலுக்கு உள்ளான கீவ் அல்லது கார்கிவ் வழியாக செல்ல வேண்டும். இதனால் நாங்கள் வெளியேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கீவ் மற்றும் கார்கிவில் இருந்து தப்பிக்க முயன்ற மக்கள் தாக்கப்பட்ட செய்திகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்; அருகிலுள்ள ரஷ்ய எல்லையில் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று நாங்கள் கேள்விப்பட்டோம், ஆனால் நாங்கள் அங்கு செல்ல வேண்டும் என்றால், எங்களுக்கு அரசு துணையாக இருக்க வேண்டும் என்று மேலும் கூறியுள்ளார்.

மற்றொரு வீடியோவில், மாணவர்கள் பைகளில் பனியைக் குவிப்பதையும், குடிப்பதற்காக மரங்களிலிருந்து விழும் பனிக்கட்டி நீரின் துளிகளை சேகரிப்பதையும் காட்டியுள்ளார்.

மார்ச் 1 ஆம் தேதி கெய்வ் மற்றும் கார்கிவில் இருந்து தப்பித்து மும்பையில், ஹங்கேரிக்கு வந்தடைந்த மாணவர்கள் குழு, தங்கள் தலைக்கு மேல் ராக்கெட்டுகள் பறந்ததையும், அந்த ராக்கெட்டுகள் வெடிப்பதை தங்கள் அடுக்குமாடி ஜன்னல்களில் இருந்து பார்த்ததாகக் கூறினர். இதனால் கிழக்கு உக்ரைனில் இன்னும் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கானவர்களை மீட்குமாறு அவர்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து சண்டிகரை சேர்ந்த 23 வயதான ரமிந்தர் பால் சிங், கியேவில் உள்ள தங்களை வெளியேற்றுவதற்கு இந்திய அரசு உதவவில்லை என்றும் "நாங்கள் எல்லையை அடைந்த பிறகுதான் உதவி செய்ததாகவும, மேலும் “பலர் இன்னும் கியேவில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்; அவர்களை மீட்க அரசை கேட்டுக் கொள்கிறேன். உக்ரேனியர்களுடன் தொடர்பு கொள்ள எனக்கு உதவியது, நான் ரஷ்ய மொழியில் பேச முடியும் என்பது எனது அதிர்ஷ்டம் என்று கூறியுள்ளார்.

கிவ்யா ரயில் நிலையத்தில் 12 மணிநேரம் காத்திருந்த பிறகு, அங்குள்ள பெண் அதிகாரி ஒருவர் மார்ச் 1 அன்று கிவ்யா நகரத்திலிருந்து ஒரு ரயிலில் ஏற தனது குழுவிற்கு உதவினார் என்று சிங் கூறினார். நகரத்தை விட்டு வெளியேறிய நாளில் தனது அபார்ட்மெண்ட் அருகே ஒரு ஏவுகணை தனது தலைக்கு மேல் பறந்ததைக் கண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கார்கிவில் எம்பிபிஎஸ் படித்துக் கொண்டிருந்த ரித்தேஷ் பிரசாத் என்ற ஒடிசாவை சேர்ந்த மாணவர் கூறுகையில், “நானும் எனது நண்பர்களும் மார்ச் 1 ஆம் தேதி கார்கிவ் நகரை விட்டு வெளியேறினோம், அதற்கு ஒரு நாள் முன்னதாக இந்திய அரசாங்கம் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தியது. அரசாங்கத்தின் ஆலோசனை தாமதமாக வந்தது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகள், தங்கள் குடிமக்களுக்கு முன்கூட்டியே ஆலோசனை வழங்கியதால் அவர்கள் விரைவாக வெளியேற்றப்பட்டார்கள்

பிரசாத், கார்கிவில் உள்ள தனது இல்லத்திலிருந்து சிறிது தூரத்தில் ஷெல் தாக்குதலைக் கண்டதாகவும், அதன் வீடியோவைப் பகிர்ந்துள்ளதாகவும் கூறினார். "பிப்ரவரி 24 முதல் மார்ச் 1 வரை, நாங்கள் எங்கள் பெரும்பாலான நேரத்தை அருகிலுள்ள மெட்ரோ நிலையத்தில் கழித்தோம், எங்கள் அடுக்குமாடி குடியிருப்பின் பின்னால் இருந்த இரண்டு வீடுகள் ஷெல் தாக்குதல்களால் தாக்கப்பட்டன.

மேலும் அருகிலுள்ள மற்றொரு குடியிருப்பும் தாக்கப்பட்டது. உக்ரைன் மக்கள் மிகவும் அன்பானவர்கள் மற்றும் மெட்ரோ வளாகத்தில் நான் ஆறு நாட்கள் தங்கியிருந்தபோது பாரபட்சம் காட்டாமல அவர்கள் எனக்கு உணவு வழங்கினர். மேலும் ஒரு மாணவர் உள்ளூர்வாசிகள் அவர்களிடம் மிகவும் அன்பாக இருப்பதாகக் கூறினார், மற்றொரு மாணவர் கார்கிவில் இருந்து வெளியேற சில உள்ளூர்வாசிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

“ஒரு மூத்த குடிமகன் தம்பதிகள் தங்கள் காரை நிறுத்தி, கியேவ் ரயில் நிலையத்திற்கு என்னை அழைத்துச் சென்றனர். அப்போது ஸ்டேஷனில் இருந்த ஒரு பெண் அதிகாரி பரிதாபப்பட்டு என்னை கூட்டம் நிறைந்த ரயிலில் ஏற அனுமதித்ததாக  மாணவி ஒருவர் கூறியுள்ளார்.

மற்ற மாணவர் கூறுகையில், “ரயிலில் ஏறுவதற்காக ரயில் நிலையத்தில் இருந்த காவலாளிக்கு 100 டாலர் லஞ்சம் கொடுத்தேன். பின்னர் நான் ஒரு வண்டி ஓட்டுநருக்கு $100 லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது, "பணம் வைத்திருந்தவர்கள் எளிதில் வெளியேறிவிட்டார்கள், மற்றவர்கள் சிக்கிக்கொண்டார்கள் என்று நான் நினைக்கிறேன்," என்று இந்த மாணவர் கூறினார். "இந்திய அரசாங்கம் தங்களுக்கு ஆதரவளிக்கவில்லை என்று உக்ரேனியர்களும் வருத்தப்படுகிறார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

India Ukraine Russia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment