குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா (ஐ.ஆர்.சி.சி) படி, மார்ச் மற்றும் ஏப்ரல் 2024-ல் கனடா கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் "வெளியேறாதவர்கள்" என்று அறிவிக்கப்பட்ட கிட்டத்தட்ட 50,000 சர்வதேச மாணவர்களில் இந்திய மாணவர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். இவர்களில், கிட்டத்தட்ட 20,000 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இது அந்த நிறுவனத்தால் கண்காணிக்கப்பட்ட மொத்த இந்திய மாணவர்களில் 5.4 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
ஆங்கிலத்தில் படிக்க: 20,000 Indian students landed in Canada but failed to show up at colleges last year
ஒட்டுமொத்தமாக, கல்வி அனுமதி பெற்றவர்களில் 6.9 சதவீதம் பேர் கல்லூரிகளில் சேராத சர்வதேச மாணவர்கள். இந்த புள்ளிவிவரங்கள் சர்வதேச மாணவர் இணக்க துறையின் கீழ் சேகரிக்கப்பட்டன. இது கல்வி நிறுவனங்கள் படிப்பு அனுமதிகளைப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக ஆண்டுக்கு இரண்டு முறை சேர்க்கை குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று கோருகிறது.
144 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கண்காணிக்கப்பட்டதாகவும், கல்லூரிகளில் சேராடத மாணவர்களின் விகிதம் பரவலாக வேறுபடுவதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. எடுத்துக்காட்டாக, பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 688 மாணவர்கள் (2.2 சதவீதம்) மற்றும் சீனாவைச் சேர்ந்த 4,279 (6.4 சதவீதம்) பேர் தங்களுக்கு நியமிக்கப்பட்ட கல்லூரிகள், பள்ளிக்ளுக்கு செல்லத் தவறிவிட்டனர். இதற்கு நேர்மாறாக, ஈரான் (11.6 சதவீதம்) மற்றும் ருவாண்டா (48.1 சதவீதம்) ஆகிய நாடுகளில் கல்லூரிகளுக்குச் செல்லாதவர்களின் விகிதம் மிக அதிகமாக இருந்தது.
கனடா - அமெரிக்க எல்லையில் சட்டவிரோத இடம்பெயர்வை எளிதாக்குவதாகக் குற்றம் சாட்டப்பட்ட கனடா கல்லூரிகளுக்கும் இந்தியாவில் உள்ள நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து இந்திய சட்ட அமலாக்க நிறுவனங்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளன. சில இந்திய மாணவர்கள் படிப்பு அனுமதிகளை ஒரு சாக்காகப் பயன்படுத்தி கனடாவிற்குள் நுழைந்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. முன்னாள் கூட்டாட்சி பொருளாதார நிபுணரும் குடியேற்ற நிபுணருமான ஹென்றி லோட்டின், பெரும்பாலான இணங்காத இந்திய மாணவர்கள் கனடாவில் தங்கியிருக்கலாம், நிரந்தர குடியுரிமையை இலக்காகக் கொண்டு பணிபுரிந்திருக்கலாம் என்று தி குளோப் அண்ட் மெயிலிடம் கூறினார்.
இந்த பிரச்சினை அமைப்பில் உள்ள சாத்தியமான இடைவெளிகளுக்கு கவனத்தை ஈர்த்துள்ளது. துஷ்பிரயோகத்தைத் தடுக்க சர்வதேச மாணவர்கள் முன்கூட்டியே கட்டணம் செலுத்த வேண்டும் என்று லோட்டின் பரிந்துரைத்தார். குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் சமீபத்தில் கடுமையான விதிகளை அறிமுகப்படுத்தினார். இதில் மாணவர் சேர்க்கை குறித்து அறிக்கை அளிக்கத் தவறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஏப்ரல் 2024-ல் ஒரு மில்லியனுக்கும் அதிகமான செல்லுபடியாகும் மாணவர் விசா வைத்திருப்பவர்கள் என்ற புள்ளிவிவர கனடாவின் மதிப்பீடுகளுக்கும், சேர்க்கை தரவுகளின் அடிப்படையில் ஐ.ஆர்.சி.சி-ன் சிறிய புள்ளிவிவரங்களுக்கும் இடையிலான முரண்பாடுகளை இது எடுத்துக்காட்டுகிறது. இந்த இடைவெளி கணக்கில் வராத மாணவர்களின் உண்மையான எண்ணிக்கை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் மேம்பட்ட தரவு சேகரிப்புக்கு நிபுணர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். மோசடி நடைமுறைகளைத் தடுக்க, மாணவர் விசா விண்ணப்பங்களில் வெளிநாட்டு ஆலோசகர்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த கனடா குடியேற்ற வழக்கறிஞர்கள் பரிந்துரைத்தனர்.