citizenship amendment bill, cab sc, iuml sc, குடியுரிமை திருத்த மசோதா, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், உச்ச நீதிமன்றம், Indian Union Muslim League, Tamil indian express, india news, Supreme Court, latest news
குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த மசோதாவை எதிர்த்து இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.
Advertisment
குடியுரிமை திருத்த மசோதா புதன்கிழமை மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த மசோதாவை எதிர்த்து இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது. இந்த மசோதா அரசியலமைப்பின் சமத்துவத்திற்கான அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது என்று இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் குற்றம் சாட்டியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் குன்ஹாலிகுட்டி, இ.டி.முஹம்மது பஷீர், அப்துல் வஹாப், கே.நவாஸ் கனி ஆகிய நான்குபேருடன் இந்தியன் முஸ்லிம் லீக் கட்சியும் குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் மத ரீதியான துன்புறுத்தல்களை எதிர்கொண்டு இந்தியாவில் புகலிடம் தேடும் இந்துக்கள், சமணர்கள், சீக்கியர்கள், பார்சிகள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதை குடியுரிமை திருத்த மசோதா எளிதாக்குகிறது. குடியுரிமை வழங்குவதற்கு வழி செய்யும் பட்டியலில் இந்த நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் இல்லை என்பதால், குடியுரிமை வழங்குவதில் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. மேலும், அவர்கள், இது அரசியலமைப்பு அடிப்படைகளுக்கு எதிரானது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.