/tamil-ie/media/media_files/uploads/2021/05/SAMPLE.jpg)
Indian virus variant being sent to UK to check for vaccine test : இந்தியாவில் அதிகரித்து வரும் இரண்டாம் தொற்றுக்கு காரணமாக அறியப்படும் வைரஸ் மாதிரியை இங்கிலாந்தின் வேண்டுகோளை ஏற்று லண்டனுக்கு அனுப்பி வைத்தது இந்தியா. அங்கு இந்த வைரஸ் மாதிரி சோதனை செய்யப்பட்டு தற்போது கையில் இருக்கும் தடுப்பூசிகள் இந்த மாதிரியை எதிர்க்க எவ்வளவு திறன் கொண்டவை என்று ஆராய்ச்சி செய்யப்படும்.
“வைரஸ் கலாச்சாரத்தின் மாதிரிகள் இங்கிலாந்துக்கு அனுப்பப்படும் பணியில் உள்ளன. உண்மையில், மாறுபாடுகளின் மாதிரிகளின் பரிமாற்றம் நடக்கிறது. அடுத்த சில நாட்களில் இது அனுப்பப்பட வேண்டும் என்று ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான மையத்தின் (Centre for Cellular and Molecular Biology) இயக்குநராக மூன்று நாட்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற ராகேஷ் மிஸ்ரா தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்குத் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் மகாராஷ்டிராவின் விதர்பா பிராந்தியத்தில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பி .1.617 என பெயரிடப்பட்ட இந்த குறிப்பிட்ட மாறுபாடு, இந்தியாவின் இரண்டாவது அலை நோய்த்தொற்றுகளைத் தூண்டுவதில் அதன் பங்கு இருப்பதால் இப்போது உலகளாவிய கவனத்தின் மையமாக உள்ளது.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள இரண்டாம் அலைக்கு இந்த வைரஸ் தான் முழுமையான காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறவில்லை. இருப்பினும் விதர்பா போன்ற சில பகுதிகளில், வழக்குகள் அதிகரிப்பதற்கு இது முதன்மைக் காரணமாக இருந்திருக்கலாம் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். தற்செயலாக, அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட குறைந்தது 17 நாடுகளில் இந்த இந்திய திரிபு வைரஸ் மாதிரிகள் கண்டறியப்பட்டுள்ளது என்று WHO தெரிவித்துள்ளது.
சில நாட்களாக பல்வேறூ வெளிநாடுகள் இந்திய பயணிகளின் வருகைக்கு தடை விதித்துள்ளனர். அவர்களின் மக்கள் தொகையிலும் இந்த வைரஸை பரப்ப வாய்ப்புகள் இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், மிகவும் செல்வாக்குமிக்க தொற்று நோய் நிபுணர்களில் ஒருவரான அந்தோனி ஃபௌசி, இந்த மாறுபாட்டின் மாதிரிகளை அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிற நாடுகளுக்கு பகுப்பாய்வு செய்ய இந்தியா உதவ வேண்டும் என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் இங்கிலாந்தில் இருந்து கோரிக்கை வந்ததாகவும், அதற்கான செயல்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததாகவும் மிஸ்ரா தெரிவித்தார். இங்கு தனித்து வைக்கப்பட்ட சில மாதிரிகளை நாங்கள் அனுப்புகின்றோம். அங்கிருந்து சில மாதிரிகளை அவர்கள் இங்கே அனுப்பி வைக்கின்றனர். சில இறுதி முடிவுகள் இன்னும் எட்டப்படவில்லை. இது போன்று பரிமாற்றம் செய்யப்படும் மாதிரிகள் மற்றும் அது தொடர்பான விவரங்கள் மிகவும் முக்கியமானவை என்று மிஸ்ரா கூறினார்.
பி .1.617 மாறுபாடு ஏற்கனவே இங்கிலாந்து மக்களிடமும் கண்டறியப்பட்டுள்ளது, எனவே அங்கேயே இந்த மாதிரிகளை பெற்று அதனை ஆராயலாம். ஆனால் இந்தியா மற்றும் இங்கிலாந்தில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் முக்கியமான வேறுபாடுகள் இருக்கக்கூடும் என்பதால் மாதிரிகள் பரிமாற்றம் இன்னும் முக்கியமானது என்று மிஸ்ரா கூறினார்.
"இந்த மாறுபாடு இப்போது இங்கிலாந்து மக்களில் பலரிடம் காணப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு மாதிரிகள் பரிமாற்றம் இப்போது இருந்ததை விட மிகவும் அவசரமானது மற்றும் பொருத்தமானது, ஆனால் அது இன்னும் முக்கியமானது, ஏனென்றால் இங்கேயும் இங்கிலாந்திலும் காணப்படும் மாறுபாடுகளுக்கு இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருக்கலாம். உயிர் மூலப்பொருட்களின் பரிமாற்றம் நேரம் எடுக்கும். நாடுகளுக்கு இடையில் இத்தகைய பொருள்களின் பரிமாற்றத்தை நிர்வகிக்கும் பல்லுயிர் தொடர்பான சர்வதேச விதிமுறைகள் உள்ளன, உயிர் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் உள்ளன, மேலும் இங்கிலாந்திலும் இந்தியாவிலும் பல அனுமதிகள் அனைத்து மட்டங்களிலும் தேவைப்படுகின்றன, ”என்று அவர் கூறினார்.
தற்போது இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள கோவிஷீல்ட் மற்றும் கோவாக்ஸின் உள்ளிட்ட மருந்துகள் இந்த பிறழ்வுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் மிஸ்ரா கூறினார்.
சி.சி.எம்.பி. மற்றும் இதர ஆராய்ச்சி நிறுவனங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இந்த இரண்டு தடுப்பூசிகளும் மிகவும் தடுப்புத்திறன் கொண்டவை என்று தெரிய வந்துள்ளது. மொடெர்னா மற்றும் ஃபைசர் போன்ற தடுப்பூசிகளுக்கான அணுகல் நம்மிடம் இல்லாத சூழலில் அந்த தடுப்பூசிகளை வைத்து சோதனைகளை மேற்ஒள்ளவில்லை. அந்த சோதனைகள் மற்ற நாடுகளில் நடைபெற்று வருகிறது.கோவிஷீட் மற்றும் கோவாக்சின் ஆகியவை இந்த மாறுபாட்டிற்கு எதிராக மட்டுமல்லாமல், வட இந்தியாவில் பரவலாகக் காணப்படும் இங்கிலாந்து மாறுபாட்டிற்கும் (பி 1.1.7) எதிராக செயல்படுகின்றன என்பதை எங்கள் சோதனைகள் காட்டுகின்றன, ”என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.