தாயின் இறுதிச்சடங்கிற்காக இந்தியா வர விசா வழங்காததால் ஜே & கே நேஷனல் பாந்தர்ஸ் கட்சியின் (ஜேகேஎன்பிபி) நிறுவனர் பீம் சிங்கின் மகன் அங்கித் லவ் தனது தவறுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இயங்கி வரும் ஜே & கே நேஷனல் பாந்தர்ஸ் கட்சியின் (ஜேகேஎன்பிபி) நிறுவனர் பீம் சிங்கின் மகன் அங்கித் லவ். தற்போது இவர் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவரது அம்மாவும் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான ஜெய் மாலா, கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி இறந்தார், அன்றிலிருந்து அவரது உடல் ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
அவரின் உடல் தற்போது ஜே.கே.என்.பி.பியின் கட்டுப்பாட்டிற்காக குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவரது எதிர்தரப்புகளில் தகனம் செய்ய முயற்சிகள் மெற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே தனது தாயார் ஜெய் மாலாவின் உடல் ஜம்முவில் உள்ள பிணவறையில் ஒரு வாரத்திற்கும் மேலாக கிடப்பதால், அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க தனது அனுமதி அளித்து விசா வழங்குமாறு ஜெய் மாலாவின் மகன் அங்கித் லவ் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஜே & கே நேஷனல் பாந்தர்ஸ் கட்சியின் (ஜேகேஎன்பிபி) நிறுவனர் பீம் சிங்கின் மகனாக அங்கித் லவ் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். “முட்டைகளை வீசியது மற்றும் இங்கிலாந்தில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் கற்கள் வீசியது தொடர்பான மற்றும் தவறுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். மேலும் அவர் தனது தாயின் இறுதிச் சடங்குகளைச் செய்ய இந்தியாவுக்கு வருவதற்காக விசாவுக்காகக் காத்திருப்பதாகக் கூறியுள்ள அவர், கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் லண்டனில் உள்ள உயர் ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதன் காரணமாக "தடுப்புப் பட்டியலில்" சேர்க்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இது தொடர்பாக லண்டனில் இருந்து இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தொலைபேசியில் பேசிய அங்கித் லவ், "நான் என் தாயின் முகத்தைப் பார்க்க விரும்புகிறேன், கடைசியாக அவளைக் கட்டிப்பிடிக்க விரும்புகிறேன்,“எனது தாயார் உ.பி.யின் மீரட்டைச் சேர்ந்த ஒரு கவுட் பிராமணர், மேலும் அவர் தனது கடைசி மூச்சு வரை அவர் நம்பிய இந்து மதச் சடங்குகளின்படி கண்ணியமான மற்றும் மரியாதையுடன் இறுதிச் சடங்குகளைச் செய்ய அவருக்கு முழு உரிமை உண்டு. நான், அவளுடைய ஒரே மகனாக இருப்பதால், உதம்பூரில் உள்ள புனித தேவக் நதிக்கரையில் அதைச் செய்ய விரும்புகிறேன், அது அவருடைய கடைசி ஆசை, ”என்று அவர் கூறினார்.
தொடர்ந்து மே 2 ஆம் தேதி அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், “நான், மறைந்த பேராசிரியர் பீம் சிங்கின் மகன் அங்கித் லவ் மற்றும் மறைந்த அட்வகெட் ஜெய் மாலாவின் ஒரே மகன். இங்கிலாந்தில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் முன்பு நடந்த போராட்டத்தின்போது முட்டை மற்றும் கற்களை வீசிய எனது தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதற்கு நான் ஆழ்ந்த மற்றும் உண்மையாக வருந்துகிறேன்.
எனது மன்னிப்பை ஏற்று இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசம் - ஜம்மு மற்றும் காஷ்மீர் பார்வையிட அவசர விசா வழங்கி அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் "என்னைச் சூழ்ந்துள்ள வேறு சிலரால் தான் தவறாக வழிநடத்தப்பட்தாகவும், இதுவே தன்னை தவறு செய்ய தூண்டியதாகவும் அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்" என்றும் அவர் எழுதியுள்ளார்.
மேலும் இனிமேல் நான் என் தேசத்திற்கு எதிராக இதுபோன்ற செயல் எதுவும் நடக்காது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், நான் என் தேசத்தை மிகவும் நேசிக்கிறேன் மற்றும் தேசத்தை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்," என்று லவ் எழுதினார், இறந்த தந்தை பீம் சிங்கும் ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் முழுமையாக இணைக்க தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார்.
அவர் ஜம்முவுக்கு நிரந்தரமாக செல்ல விரும்பவில்லை என்றும், தனது தாயின் உடலை சவக்கிடங்கில் இருந்து “உதம்பூரிலுள்ள தேவக்கிற்கு, போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்ல அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்றும், அவரது இறுதிச் சடங்குகளை நான் செய்தவுடன், அடுத்த விமானத்திலேயே என்னை யூகேவுக்கு அனுப்பிவிடுங்கள் என்று எழுதியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான ஜெய் மாலா, ஏப்ரல் 26ஆம் தேதி இறந்தார், அன்றிலிருந்து அவரது உடல் ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ளது, இதனிடையே ஜெய் மாலாவின் உடலை தன்னிடம் ஒப்படைக்குமாறு அண்ணன் மகள் மிருக்னயனி ஸ்லாத்தியா, கூறியுள்ளார். மேலும் அங்கித் லவ் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வருவதற்கான வாய்ப்புகள் சாத்தியமாக இல்லை என்பதால் தான் இவ்வாறு கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல் ஜெய் மாலாவின் மருமகனும், ஜே & கே முன்னாள் அமைச்சருமான ஹர்ஷ் தேவ் சிங், ஜெய் மாலாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டு பரபரப்பை உருவாக்கியதாக ஸ்லாத்தியா குற்றம் சாட்டினார்.
இது கறித்து ஹர்ஷ் தேவ் மீடியாக்களிடம் கூறுகையில், அங்கித் லவ் தான் பிரேத பரிசோதனை செய்ய விரும்பினார். புதன்கிழமை இரவு ஒரு பேஸ்புக் பதிவில், ஹர்ஷ் தேவ் அங்கித் லவ்விடம் "தனது பிடிவாதத்தைத் தவிர்த்து, மாலா ஜியின் உடலை தகனம் செய்ய அனுமதிக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார். "இப்போது 8 நாட்கள் ஆகிறது," என்று அவர் எழுதினார்.
ஆனால் ஸ்லாத்தியாவின் கூற்றுப்படி, ஜெய் மாலா இறப்பதற்கு முன்பு அவருடன் ஜம்முவில் உள்ள டோமானாவில் தங்கியிருந்தார், மேலும் ஏப்ரல் 25 மாலை வீட்டில் படிக்கட்டுகளில் இருந்து விழுந்தார். மறுநாள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் இறந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.