Panama Papers List: பனாமா பேப்பர்ஸ் பட்டியலில் அமிதாப், ஐஸ்வர்யா பச்சன் பெயர்கள்!

ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், கேபி சிங், இக்பால் மிர்ச்சி மற்றும் அதானியின் சகோதரர் பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

உலகில் இருக்கும் பிரபலமானவர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள் சொந்த நாடுகளில் கணக்கில் காட்டாத கோடிக்கணக்கான பணத்தினை பனாமா நாட்டில் சேமித்து வைத்திருந்தனர்.  வரி ஏய்ப்பு செய்து சேமித்துள்ள சொத்துகளின் தொடர்பாக சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்புடன் இணைந்து செயல்பட்டது இந்தியன் எக்ஸ்பிரஸ்.

இன்று அதிகாலை, பனாமா நாட்டில் பணம் சேமித்து வைத்திருக்கும் இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டது, இந்தியன் எக்ஸ்பிரஸ். 1.2 மில்லியன் மக்களின் கணக்குகளை கவனித்து வந்ததது பனாமா நாட்டில் இருக்கும் மொசாக் ஃபோன்சாக்கா நிறுவனம். இந்த பட்டியலில் இருக்கும் பெயர்கள் கசிய, இந்தியாவிலிருந்து மட்டும் சுமார் 12,000 நபர்கள் பனாமாவில் சட்டத்திற்கு மாறாக பணம் சேமித்து வைத்தது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் கடந்த எட்டு மாதங்களாக சர்வதேச கூட்டமைப்புடன் இணைந்து 36,000 ஃபைல்களை விசாரித்தது குறிப்பிடத்தகக்து.

மேலே குறிப்பிட்டுள்ள 12,000 நபர்களில் முதல் 500 நபர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கின்றது இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம். அந்த 500 நபர்களில் 234 பேர், தங்களுடைய பாஸ்போர்ட்களை ஆவணமாக அங்கே பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது.

இந்த பட்டியலில் இந்தியாவின் திரைப்பட நட்சத்திரங்கள் ஐஸ்வர்யா ராய், அவருடைய மாமனார் அமிதாப் பச்சன், டிஎல்ஃப் நிறுவனத்தின் தலைவர் கேபி சிங் மற்றும் அவருடைய ஒன்பது குடும்ப உறுப்பினர்கள், அப்பல்லோ டையர்ஸின் ப்ரமோட்டர்கள், கவுதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி ஆகியோரின் பெயர்களும் இதில் இடம் பெற்றுள்ளது. மேலும் இரண்டு அரசியல்வாதிகளின் பெயரும் இதில் இடம் பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தினைச் சேர்ந்த ஷிர்ஷிர் பஜோரியா மற்றும் டெல்லியில் இருந்து செயல்படும் லோக்சத்தா கட்சியின் முன்னாள் தலைவர் அனுராக் கெஜ்ரிவால் ஆகியோரின் பெயரும் இதில் இடம் பெற்றுள்ளது. பனாமா பேப்பர்ஸ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

Panama paper List

Panama paper List

சில இடங்களில் குறிப்பிட்ட நபர்களின் பெயர்களை கண்டறிய முடியவில்லை. மாறாக, விசாரணையில் ஈடுபட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் எந்தெந்த இடங்களில் இருந்து பனாமாவில் பணம் சேமிக்கப்பட்டிருக்கின்றது என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது. பஞ்சகுலா, டேராடூன், வதோதரா போன்ற இடங்களின் பெயர்களும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது. விசாரணையில் மேலும் பல முக்கியப் புள்ளிகளின் பெயர்களும் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

2003 வரை, இந்தியர்கள் யாருக்கும் வெளிநாட்டில் பணம் சேமித்து வைக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை. 2004ஆம் ஆண்டு முதல் முறையாக, 25,000 அமெரிக்க டாலர் வரை ஒரு வருடத்திற்கு முதலீடு செய்ய அனுமதி அளித்தது மத்திய அரசு. இன்று  2,50,000 டாலர்கள் வரை சேமித்து வைக்க அனுமதி வழங்கியிருக்கின்றது.

பல ஆண்டுகளாக, வெளிநாட்டில் இயங்கி வரும் கம்பெனிகளில் பண முதலீடு செய்ய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், 2013 ஆகஸ்ட் மாதம் முதல் கொண்டு இந்தியர்கள் வெளிநாட்டில் செயல்படும் நிறுவனங்களில் முதலீடு செய்யலாம் என்ற அனுமதியும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பனாமா பேப்பர் விவகாரம் தொடர்பாக, நரேந்திர மோடி செய்த முதல் சட்டப்பூர்வ நடவடிக்கை, சிறப்பு விசாரணைக் குழுவினை 2014ல் நிறுவியது தான். 2015ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் குழுக்களுடன் இணைந்து இந்த விசாரணையில் ஈடுபட்டு வந்ததுள்ளது. இச்செய்தியினை ஆங்கிலேயத்தில் படிக்க 

76 நாடுகளைச் சேர்ந்த 365 ஊடகவியலாளர்களுடன், இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் 25 ஊடகவியலாளர்களும் இணைந்து இவ்விசாரணையில் ஈடுபட்டு வந்திருக்கின்றார்கள்.

மொசாக் ஃபோன்சாக்கா நிறுவனத்தில் நாற்பத்து ஆண்டுகளாக, பனாமாவில் கணக்கு வைத்திருப்பவர்களின் விபரங்கள் கிடைக்கப்பெறுகின்றது. 1977ல் தொடங்கி 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  வரை ரெஜிஸ்டர் செய்த அனைவரின் தகவல்களும் அதில் கிடைக்கப்பெறும். இந்த கால கட்டம் தான், இந்தியா வெளிநாடுகளுடன் அதிக அளவு வர்த்தகம் செய்ய முனைந்த தருணம். இந்த கால கட்டத்திற்கு பின்பு தான், கறுப்புப் பணம் மத்திய அரசினால் கட்டுப்படுத்த இயலாத பெரிய பிரச்சனையாக மாறியது.

ஆறுமாத கம்ப்ளையன்ஸ் ஸ்கீம் முடிந்த பின்னர், 637 நபர்களிடமிருந்து ரூபாய் 3,770 கோடி பெறப்பட்டது. இனி அதுவும் முடியாது. கணக்கில் காட்டாமல் வெளிநாடுகளில் பணம் மட்டும் சொத்துகளை சேமித்து வைத்திருப்பவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்றும், அதிக அளவில் அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் பயணம்

2013ல் ‘ஆஃப்ஷோர் லீக்’கில் இரண்டு மத்திய அமைச்சர்கள் உட்பட 612 நபர்களின் பட்டியலை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

2015ல் ஃப்ரெஞ்ச் பத்திரிக்கை நிறுவனமான லே மாண்ட்டே நிறுவனத்துடன் இணைந்து 2015ல், ஸ்விஸ் நாட்டின் ஜெனிவாவில் கணக்கில் காட்டப்படாத பணத்தினை வைத்திருக்கும் நபர்களின் பெயர்களை ‘ஸ்விஸ் லீக்’ என்ற பெயரில் வெளியிட்டது. அதில் 1195 இந்தியர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இது லே மாண்ட்டே நிறுவனம் 2011ல் இந்திய அரசிற்கு அளித்த 628 நபர்களின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகம்.

பனாமா பேப்பர்ஸ் விசாரணைக்காக இந்தியன் எக்ஸ்பிரஸ் 76 நாடுகளின் ஊடகவியலாளர்களுடன் இணைந்து இப்பட்டியலை தயாரித்து வெளியிட்டிருக்கின்றது இந்தியன் எக்ஸ்பிரஸ்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close