டைம் பத்திரிகையின் 100 செல்வாக்கு மிகுந்த மனிதர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி இடம் பிடித்தார். தலைவர்கள் என்ற பிரிவின் கீழ் அமேரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
TIME இதழின் ‘ செல்வாக்கு மிக்க 100 மனிதர்கள் ’ பட்டியலில் பெயரிடப்பட்ட இந்தியர்கள் இங்கே:
நரேந்திர மோடி: 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் டைம் பத்திரிகையின் பட்டியலில் இடம் பெறத் தவறிய நரேந்திர மோடி, இந்த ஆண்டு உலகின் மிக செல்வாக்கு மிகுந்த மனிதர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், மோடியைப் பற்றிய விமர்சனத்தையும் பத்த்ரிக்கை முன்னேடுத்துள்ளது. அதில், “இந்தியா பிரதமர்கள் அனைவரும் 80 சதவீத விழுக்காடு உள்ள இந்து மக்களிடமிருந்து வந்தவர்கள். ஆனால், மோடி மட்டுமே வேறு யாரும் முக்கியமில்லை என்ற கோணத்தில் ஆட்சி செய்துள்ளார்” என்று தெரிவித்தது.
பில்கிஸ் : இந்த ஆண்டின் தொடக்கத்தில், குடியுரிமை திருத்தச் சட்டங்களுக்கு எதிராக டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் நடந்த தொடர் போராட்டங்களில் மக்கள் மனதை ஈர்த்த பில்கிஸும் (82 வயது முதியவர்) இந்த ஆண்டின் டைமில் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். நாடு முழுவதும் ஷாஹீன் பாக் போன்ற போராட்டங்கள் ஏற்பட இவர் தூண்டுதலாக விளங்கினார்.
ரவீந்திர குப்தா : எச்.ஐ.வி. நோய்த் தொற்றுக்கு உள்ளான பிரிட்டன் நோயாளி ஒருவருக்கு ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை மூலம் எச்.ஐ.வி. நோய்க்கிருமிகள் முழுமையாக அகற்றும் ஆராய்ச்சிக்குத் தலைமை தாங்கியவர் தான் ரவீந்திர குப்தா. அந்த 'லண்டன் நோயாளி' எச்.ஐ.வி. கிருமியிடம் இருந்து விடுதலை பெற்ற உலகின் இரண்டாவது நோயாளி எனப் பெயரெடுத்தார். அதன் பிறகு, கேம்பிரிட்ஜ் இன்ஸ்டிடியூட் ஆப் தெரபியூடிக் இம்யூனாலஜி மற்றும் நோய்த் தொற்று மருத்துவ நுண்ணுயிரியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
சுந்தர் பிச்சை: ஆல்பாபெட்டு மற்றும் கூகுள் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலரான சுந்தர் பிச்சை செல்வாக்கு மிக்க மனிதர்களில் ஒருவராக பெயரிடப்பட்டுள்ளனர்.
ஆயுஷ்மான் குர்ரானா: இந்த ஆண்டு பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்திய நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா ஆவார். ஃபோப் வாலர்-பிரிட்ஜ் , கிராமி விருது பெற்ற யோ-யோ மா, ஆடை வடிவமைப்பாளர் ஐகான் டாப்பர் டான் போன்றவர்களுடன் ‘கலைஞர்’ பிரிவின் கீழ் ஆயுஷ்மான் குர்ரானா பெயரிடப்பட்டார்.