எஞ்சின் இல்லாத ட்ரெய்ன் 18 : சிறு சறுக்கலும் இல்லாமல் வெற்றி பெற்ற முதல் சோதனை ஓட்டம்

கோட்டா - சவாய் மாதோப்பூர் இடையே நடத்தப்பட்ட சோதனை ஓட்டம் வெற்றி.

India’s fastest Train 18 : இன்று வரை இந்தியாவில் அதிவேக தொடர்வண்டி சேவை என்பது சதாப்தி ரயில் தான். மணிக்கு 130 கி.மீ வேகத்தில் பயணிக்கும். அந்த சாதனையை முறியடிக்கும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்டது தான் ட்ரெய்ன் 18.  சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் ரயில் பெட்டித் தொழிற்சாலையில் இந்த ரயில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரயிலின் முதல் சோதனை ஓட்டம் நேற்று கோட்டா – சவாய் மாதோப்பூர் இடையே நடத்தப்பட்டது. 160 கிலோ மீட்டர் வேகத்தை எளிதில் எட்டும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த ரயில் சோதனை ஓட்டத்தில் வெற்றி பெற்றது. நேற்று 180 கி.மீ வேகத்தை எட்டியது ட்ரெய்ன் 18.

மேலும் எந்த விதமான ஆட்டமும் இன்றி இந்த அதிவேக ரயில் பயணித்தது என்று அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். சதாப்தி ரயில் இயக்கப்படும் ரயில் நிலையங்களுக்கு மத்தியில் ட்ரெய்ன் 18 ரயில்கள் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 25ம் தேதி புது டெல்லிக்கும் வாரணாசிக்கும் இடையே முதல் ஓட்டத்தை தொடங்குகிறது ட்ரெய்ன் 18.

எஞ்சின் இல்லாத ட்ரெய்ன் 18 (India’s fastest Train 18) சிறப்பம்சங்கள்

16 கோச்களுடன் அமைக்கப்பட்டிருக்கும் இந்த ரயில் 2 உயர்வகுப்பு பெட்டிகள் அமைக்கப்பட்டிக்கிறது.

ஒவ்வொரு பெட்டியிலும் தலா 52 இருக்கைகள் உள்ளன. இந்த இருக்கைகள் அனைத்தும் 360 டிகிரி சுழலும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. மீதம் இருக்கும் கோச்களில் 78 இருக்கைகள் உள்ளன.

வைஃபை, ஆட்டோமேட்டிக் டோர்ஸ், குறைந்த அளவு நீரினை பயன்படுத்தும் உறிஞ்சுக் கழிவறைகள், ஜி.பி.எஸ் போன்ற சிறப்பம்சங்கள் இதில் இணைக்கப்பட்டிருக்கிறாது.

மெட்ரோ ட்ரெய்ன்கள் போலவே இதிலும், ட்ரெய்ன் நின்ற பின்னரே ட்ரெயினின் கதவுகள் திறக்கும்.

மாற்றுத் திறனாளிகளும் எளிதாக ரயிலில் ஏற வழி செய்யும் வகையிலும், ரயில் ஏறும் போது ஏற்படும் விபத்துகளில் இருந்து பாதுகாப்பாய் இருக்கும் வகையில் ஸ்லைடர்கள் வைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க : சதாப்திக்கு மாற்றாக களம் இறங்கும் ட்ரெய்ன் 18

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close