இந்தியாவில் முதன்முறையாக மூன்று பெண்கள் இந்திய விமானப்படையில் ஃபைட்டட் பைலட்டாக பணிபுரிய உள்ளனர். இது, ஒட்டுமொத்த இந்தியாவே பெருமைகொள்ள வேண்டிய தருணமாகும்.
ஆவணி சதுர்வேதி, பாவனா காந்த், மோகனா சேத் ஆகிய மூன்று பெண்கள்தான் இந்த வரலாற்று சாதனைக்குச் சொந்தமானவர்கள். இவர்கள் விரைவிலேயே எம்.ஐ.ஜி.-21 பைசன் எனும் ஃபைட்டர் விமானத்தை இயக்க உள்ளனர். இந்த மூன்று பேரும், இந்தியாவிலேயே முதன்முறையாக இந்திய விமானப்படையில் தீவிரமான பைலட் பயிற்சி மேற்கொண்ட முதல் பெண்கள் ஆவர்.
/tamil-ie/media/media_files/uploads/2018/01/52208a24-58a2-4e58-b47f-86725d7037ca-300x225.jpg)
இவர்கள் தங்கள் பணியை ஆரம்பிக்கவிருக்கும் எம்.ஐ.ஜி-21 பைசன் விமானம் தனி விமானமாகும். உலகிலேயே மிக வேகமாக (மணிக்கு 340 கி.மீ) செல்லக்கூடியது இந்த விமானம்.
/tamil-ie/media/media_files/uploads/2018/01/1cd1b6fb-f04b-4884-8322-191cac592e2f-300x186.jpg)